ஊ சொல்றியா, என் சாமி பாடல் இடம் பெற்ற புஷ்பா வெளியாகி ஓராண்டு நிறைவு: புஷ்பா மரமும் வளர்ந்துவிட்டது!

By Rsiva kumar  |  First Published Dec 17, 2022, 4:53 PM IST

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள புஷ்பா படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.


இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. முழுக்க முழுக்க செம்மரக் கட்டை கடத்தலை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தில் சமந்தாவின் குத்துப் பாடலான ஊ சொல்றியா என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவி நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு, இந்த பாடலுக்கான டான்ஸுக்கும் ரசிகர்கள் வீடியோ செய்து அதனை வெளியிட்டு வந்தனர். இவ்வளவு ஏன், பிரபலங்கள் கூட இந்தப் பாடலுக்கான டான்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

On the occasion of , Chennai Royal Prabhakar did Archana in temple.

He also planted a tree on movie release date last year, named that plant pushpa.that plant is also growing very well pic.twitter.com/XUvNjaTVrY

— Ramesh Bala (@rameshlaus)

Tap to resize

Latest Videos

அந்தளவிற்கு அந்தப் பாடல் அமைந்திருந்தது. அதே போன்று சாமி பாடலும் வைரலானது. அந்தப் பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா டான்ஸ் ஆடும் காட்சி ரசிகர்களை கவர செய்தது. பட புரோமோஷன் நிகழ்ச்சியிலும் ராஷ்மிகா மந்தனா சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். அல்லு அர்ஜூனும் தன் பங்கிற்கு டான்ஸ் ஆடி ரசிகர்களையும் அதே போன்று நடனமும் ஆட வைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற படங்களில் அல்லு அர்ஜூனின் இந்தப் படமும் ஒன்று என்று சொல்லலாம்.

உதயநிதி தொட்டதெல்லாம் ஹிட்! 2022ல் ரெட்ஜெயண்ட் வெளியிட்டு ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய படங்கள் ஒரு பார்வை

கூலிக்கு செம்மரக் கட்டைகளை வெட்டும் வேலை செய்த வந்த அல்லு அர்ஜூன், போலீஸ் ரெய்டு வருவதை தெரிந்து கொண்டு கட்டைகளை ஏற்றிய லோடு லாரியை அப்படியே கொண்டு சென்று தண்ணீருக்குள் மூழ்க செய்து விடுவார். அந்த லாரி எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து கொடுக்க, பணம் வாங்கி, அந்த பணத்தை வைத்து மாருதி கார் வாங்குகிறார். அதன் பிறகு அடுத்தடுத்த லெவலுக்கு செல்கிறார். ஒரு கட்டத்தில் போலீசாக வரும் பகத் பாசிலுக்கும், அல்லு அர்ஜூனுக்கும் மோதல் வருகிறது. இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனாவுக்கும், அல்லு அர்ஜூனுக்கும் திருமணம் நடக்கிறது. இதையடுத்து மீதி கதை புஷ்பா 2ல் தெரிய வரும்.

‘அவதார் 2’ பார்க்க சென்ற ரசிகருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்.. தியேட்டரிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்

கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட் வரையில் உருவாக்கப்பட்ட புஷ்பா படம், இந்தியா முழுவதும் வெளியாகி 370 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. புஷ்பா படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆன நிலையில், சென்னை ராயல் பிரபாகர் கோயிலில் அர்ச்சனை செய்துள்ளார். அவர், புஷ்பா படம் வெளியான நாளில் புஷ்பா என்ற பெயரில் மரக்கன்று நட்டும் வைத்துள்ளார். தற்போது அந்த கன்று வளர்ந்து பெரியதாகியுள்ளது. இதனை வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எனது சகோதரனின் பயணம் இன்று முடிந்து விட்டது - பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி: குஷ்பு டுவீட்!

click me!