‘அவதார் 2’ பார்க்க சென்ற ரசிகருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்.. தியேட்டரிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்

By Ganesh A  |  First Published Dec 17, 2022, 2:45 PM IST

ஆந்திராவில் அவதார் 2 படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தியேட்டரிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டத்தின் பெடாபுரம் பகுதியை சேர்ந்தவர் லக்‌ஷ்மிரெட்டி சீனு. இவர் தனது சகோதரர் ராஜு உடன் பெடாபுரத்தில் உள்ள தியேட்டருக்கு அவதார் 2 படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்தபோது லக்‌ஷ்மிரெட்டி சீனுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது

இதையடுத்து தியேட்டரிலேயே சுருண்டு விழுந்த அவரை மீட்டு உடனடியாக பெடாபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் அவரின் சகோதரர் ராஜு. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்...  ரஜினிகாந்த் 24 ஆண்டுகளாக தக்கவைத்த சாதனையை தகர்த்தெறிந்த ராஜமவுலி! ஜப்பானில் ‘முத்து’வை முந்தியது ஆர்.ஆர்.ஆர்

அவதார் 2 படம் பார்க்க சென்று மாரடைப்பால் மரணமடைந்த லக்‌ஷ்மிரெட்டி சீனுவுக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். லக்‌ஷ்மிரெட்டி சீனுவின் மறைவு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதேபோன்ற ஒரு நிகழ்வு அவதார் படத்தின் முதல் பாகம் ரிலீசானபோது நடந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு அவதார் படம் பார்க்க சென்ற தைவானை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரெனெ மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் அரங்கேறியது. தற்போது அதேபோன்ற சம்பவம் ஆந்திராவிலும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... எனது சகோதரனின் பயணம் இன்று முடிந்து விட்டது - பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி: குஷ்பு டுவீட்!

click me!