
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தனது அதிரடி நடிப்பாலும், மாஸ் டைலாக்குகளாலாலும் ரசிகர்களை தன் வைத்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே அங்கு உண்டு.
இவரின் லெஜண்ட் மற்றும் சிம்ஹா வெற்றிக்கு பிறகு இயக்குனர் போயபதி ஸ்ரீனு மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் அகண்டா. மாஸ் மசாலா படமாக உருவாகியுள்ள திரைப்படமான இதில் நடிகர் பால கிருஷ்ணா இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பிரக்யா ஜெய்ஸ்வால் ஐஏஎஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும், ஜெகபதி பாபு அகோரியாவும் நடித்துள்ளார். இவர்களுடன் நந்தமுரி பாலகிருஷ்ணா, அவினாஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அகண்டா படம் கடந்த டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி மாஸ் வெற்றி பெற்று வருகிறது. இது குறித்து ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, "அகன்டா திரைப்படம், மகத்தான தொடக்கத்தைப் பெற்றுள்ளது என்பதைக் கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி! நந்தமுரிபாலகிருஷ்ணா, போயபதி ஸ்ரீனு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்". என கூறியுள்ளார்.
உலக நடுகல் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ள இந்த படம் ஆந்திராவில் மூன்று நாட்களில் ரூ.7.03 கொடியையும், அமெரிக்காவில் சுமார் இந்திய மதிப்பில் ரூ. 5 கொடிக்கு மேலும் வசூல் செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முழுக்க முழுக்க மாஸ் திரைப்படமாக தெலுங்கு மொழி திரைப்படமாக வெளியாகி ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. சராசரியான திரைக்கதை.இருப்பினும், பாலகிருஷ்ணா வித்தியாசமாக நடிப்பும் பஞ்ச் டைலாக்குகளும் அரங்கத்தை அதிர செய்து வருகிறது.
அகண்டா படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு மற்ற மொழி திரை பிரியர்களின் மத்தியில் ஓங்கியது. இந்நிலையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் உரிமையை கைப்பற்ற பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியாட்வாலா முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் அக்ஷ்யகுமார் அல்லது அஜய் தேவ்கனை நாயகனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. எனினும் இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் மட்டுமே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தின் மாஸ் வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று மாலை அகண்டா சக்சஸ் மீட் எம்ஜிஎம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.