Sara Tendulkar: மாடலிங் விளம்பரத்திற்காக.. குட்டையான டைட் உடையில்.. போஸ் கொடுத்த சச்சின் மகள் சாரா! வீடியோ..

Published : Dec 09, 2021, 10:45 AM IST
Sara Tendulkar: மாடலிங் விளம்பரத்திற்காக.. குட்டையான டைட் உடையில்.. போஸ் கொடுத்த சச்சின் மகள் சாரா! வீடியோ..

சுருக்கம்

கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா (Sara Tendulkar) முதல் முறையாக நடித்துள்ள விளம்பர படத்தின் வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா முதல் முறையாக நடித்துள்ள விளம்பர படத்தின் வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

லண்டலின் தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்துள்ள சாரா டெண்டுல்கர், தற்போது தனக்கு பிடித்தமான துறையை தேர்வு செய்து திறமையை வெளிப்படுத்த துவங்கியுள்ளார். ஒரு சர்வதேச ஆடை பிராண்டிற்கான விளம்பர படத்தின் மூலம் மாடலிங் உலகில் அடியெடுத்து வைத்துள்ள இவரது வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

24 வயதே ஆகும் சச்சின் மகள் சாரா, மிகவும் பிரபலமான Ajio Luxe இல் கிடைக்கும் ஆடைகளுக்கான விளம்பர படத்தில் தான் தற்போது நடித்துள்ளார். இந்த வீடியோவை கடந்த ஓரிரு தினத்திற்கு முன் சாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் கொண்டுள்ளார். இந்த வீடியோவில் இவரை தவிர, விக்ரம் மகன் துருவ் பட நாயகி பனிதா சந்து மற்றும் தானியா ஷ்ராஃப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

பனிதா சந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'அக்டோபர்' என்கிற திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகி பின்னர் தமிழிலும் நடித்தவர்.  நடிகை, தானியா ஷ்ராஃப் ஒரு இன்ஸ்டாகிராம் செல்வாக்கு பெற்றவர் மற்றும் தொழிலதிபர் ஜெய்தேவ் ஷ்ராப்பின் மகள் ஆவார். தற்போது சாரா டெண்டுல்கர் விளம்பரத்தின் இடையில் எடுக்கப்பட்ட சில போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதில் உடலோடு ஒட்டி இருக்கும் குட்டை உடையில் செம்ம ஸ்டைலிஷாக உள்ளதை பார்க்கமுடிகிறது.

சாராவின் முதல் விளம்பர படத்திற்கு தற்போது வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. சச்சின் மற்றும் அஞ்சலி டெண்டுல்கரின் மூத்த மகளான சாரா. மும்பையில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றவர். தன்னுடை தாயை போலவே மருத்துவர் துறையை தேர்வு செய்த இவர், தற்போது மாடலிங் துறையிலும் கலக்க துவங்கியுள்ளார். தன்னுடைய 20 வயது வரை பெரிதாக கேமராவில் வெளிச்சம் படாமலேயே இருந்த சாரா தற்போது சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 1.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!