Ponniyin Selvan : பின்னணி விளக்கம் கொடுத்த பொன்னியின் செல்வன் இயக்குனர் ; வீடியோ பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்!!

By Kanmani PFirst Published Dec 9, 2021, 10:30 AM IST
Highlights

PonniyinSelvan Background score composing : பொன்னியின் செல்வன் படத்திற்கான பின்னணி இசை குறித்து இயக்குனர் மணிரத்தினம் இசை குழுவுடன் கலந்துரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இதில் விக்ரம், ஜெயராம்,  சரத்குமார், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

டெக்னிக்கல் சைடிலும் இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவிற்கு ரவிவர்மன், கலைக்கு தோட்டாதரணி என மிகப்பெரிய ஜாம்பாவன்கள் டீம் பணியாற்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படம் இரண்டு பாகமாக உருவாகி உள்ளது. இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்து விட்டது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் 6 பாடல்களும், 2-ம் பாகத்தில் 6 பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

பொன்னியின் செல்வன் படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 28-ந் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் அன்றைய தினம் எந்தவித போட்டியுமின்றி இப்படம் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்திற்கு அமையவுள்ள பின்னணி இசையை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இசைக்குழுவிற்கு விளக்கம் அளிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

"

click me!