"கண்டபடி பேசுறதுக்கு 'content' னு பேரு" பிக் பாஸுக்கு போனப்ப இது தெரியலையா ? கஸ்தூரியை திட்டும் நெட்டிசன்கள்

Kanmani P   | Asianet News
Published : Dec 09, 2021, 09:16 AM IST
"கண்டபடி பேசுறதுக்கு 'content' னு பேரு"  பிக் பாஸுக்கு போனப்ப இது தெரியலையா ? கஸ்தூரியை திட்டும் நெட்டிசன்கள்

சுருக்கம்

Kasturi :"தப்பான ஆட்களை தாறுமாறா promote பண்ணுவாங்க. கண்டபடி பேசுறதுக்கு 'content' னு பேரு" ரியாலட்டி ஷோக்கள் பற்றி கஸ்தூரியின் கருத்து குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

வழக்கறிஞரான நடிகை கஸ்தூரி அரசியலில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அதோடு அவ்வப்போது விமரிசனங்களால் சமூகவலைத்தளத்தை அக்கிரமித்தும் வருவார். இவர் வசிப்படாத அல் இல்லை என்னும் அளவிற்கு அரசியல் சினிமா, தொலைக்காட்சி ஷோஸ் என அனைத்து ஏரியாக்களில் மூக்கை நுளைத்து வருகிறார் கஸ்தூரி.

இந்நிலையி இவர் தற்போது ரியாலிட்டி ஷோ குறித்து ட்வீட் செய்திருந்த பதிவுதான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

முன்னதாக பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்ட கஸ்தூரி ஹவுஸ் மேட்டை பாடாய் படுத்தி ஒருவழியாக எலிமினேட் ஆனார். இவர் அங்கு இருந்தவரை பல பிரச்னைகளுக்கு வித்திட்டவராக இருந்தவர்.

இவ்வாறு இருக்க நேற்று தனது ட்வீட்டர் பக்கத்தில்: அந்த டிவி culture அப்படித்தான். Reality show la reality சுத்தமா இருக்காது. தப்பான ஆட்களை தாறுமாறா promote பண்ணுவாங்க. கண்டபடி பேசுறதுக்கு content னு பேரு. ஆனா இப்பல்லாம் சாயம் சீக்கிரமே வெளுத்துருது. #vaaymaiyeVellum என குறிப்பிட்டுள்ளார்.

 

 

ஏற்கனவே வசந்த் தொலைக்காட்சியில் வாய்மையே வெல்லும் என்னும் ஷோ ஒளிபரப்பாகி வருவதால் அந்த தொலைக்காட்சி குறித்து கஸ்தூரி விமரிசனம் செய்திருக்க கூடும் என்னும் எதிர்ப்பு கிளம்பியது. 

பின்னர் தனக்கு வசந்த் டிவியில் வாய்மையே வெல்லும் என்னும் ஷோ ஒளிபரப்பாவது தெரியாது என்றும், அந்த நிகழ்ச்சியை நான் குறிப்பிடவில்லை என்றும் கஸ்தூரி கூறியிருந்தார்.

இதற்கிடையே நீங்கள் பிக் பாஸ் என்னும் ரியாலட்டி ஷோவில் கலந்து கொள்ளும் போது இது போன்ற நிகழ்ச்சிகளில் கோளாறு இருப்பது தெரியவில்லையா என பலர் கேட்டு வந்தனர். தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் ஷோவில் அரசியல் களம் போன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மிக நல்ல கருத்துக்களை பேசி வரும் போட்டியாளர்களுக்கு தற்போது செம வாய்ப்பு கிடைத்தார் போல ஒருவரி ஒருவர் தரம் தாழ்ந்த வார்த்தைகளை கொண்டு விமர்சித்து வருகின்றனர்.

ஒருவேளை இதுகுறித்து கஸ்தூரி பேசியிருக்க கூடும் என்னும் யூகம் ஏற்படும் விதத்தில் இவர் தற்போது வெளியிட்டுள்ள ட்வீட்டில்:  என் அனுபவத்தில் , முதலாளிகளையும் கோமாளிகளையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிந்து கொண்டேன்,  அத்ததான் சொன்னேன். என கூறியுள்ளார்.

 

 

இவரது ட்வீட்டும் அதன் கமெண்டுகளுமே இன்றைய ட்ரெண்டாகி உள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள் மீது ரூ.4,000 கோடி முதலீடு... ஜியோஹாட்ஸ்டார் அதிரடி
மதுரை, மலப்புரம், மாண்டியாவிலிருந்து வரும் படங்களே உண்மையான தேசிய கலாச்சார சின்னங்கள்: கமல்ஹாசன் புகழாரம்