BiggBoss5 தாமரைக்கு எதிராக பிரியங்காவுடன் கூட்டு சேரும் பாவனி..பெண் போட்டியாளர்களால் களைகட்டும் பிக்பாஸ் வீடு

Kanmani P   | Asianet News
Published : Dec 09, 2021, 07:48 AM IST
BiggBoss5 தாமரைக்கு எதிராக பிரியங்காவுடன் கூட்டு சேரும் பாவனி..பெண் போட்டியாளர்களால் களைகட்டும் பிக்பாஸ் வீடு

சுருக்கம்

Bigg Boss Tamil 5: இமான் அண்ணாச்சி தரைகுறைவாக பேசினால் கூட அமைதியாக இருக்கும் தாமரை நாங்கள் எதாவது கூறினால் சண்டைக்கு வருவது ஏன் என பல கேள்விகளை இருவரும் முன்வைத்து தாமரையை அலற விட்டு வருகின்றனர். .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் டாஸ்குகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறும் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ் மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி இந்த டாஸ்கில் ராஜு, தாமரை, நிரூப் , சிபி ஒரு அணியாகவும் சஞ்சீவ், இமான், வருண், அக்ஷ்ரா ஒரு அணியாகவும், அபினய், பிரியங்கா, அமீர், பாவ்னி ஒரு அணியாகவும் பிரிந்தனர்.

மேலும் அரசியல்வாதிகள் போல ஆண்கள் வெள்ளை சட்டை, வேஷ்டியிலும், பெண்கள் அனைவரும் சேலை அணிந்தும் இருந்தனர். சிபி அணியினர் 'பிக்பாஸ் மக்கள் முன்னேற்றக் கழகம்’ BBMK’ என்றும் சஞ்சீவ் அணியினர் "NPP” கட்சி என்றும், பிரியங்கா அணியினர் ‘உரக்க சொல்’ என்றும் தங்களது கட்சிகளுக்கு பெயரிட்டுள்ளனர். பின்னர் "வெற்றிக்கொடி கட்டு" என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் கார்டன் ஏரியாவில் கொடிகள் நடுவதற்கு இரண்டு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தது. எந்த இரண்டு நபர்கள் தங்கள் கட்சிக்கான இரண்டு கொடிகளை நடுகிறார்களோ அவர்களது அணிக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இறுதியில் எந்த அணி அதிக மதிப்பெண்கள் வாங்குகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும் என கூறப்பட்டது.

ஏற்கனவே  தாமரை,  நிரூப் உடனான பிரியங்காவின் சண்டை இந்த டாஸ்கில் கொழுந்து விட்டு எரிகிறது. நேற்றைய எபிசோடில் தலைவர்கள் ஹவுஸ் மேட் குறித்து பேசா வேண்டு. அந்த கருத்துக்களுக்கு மற்ற போட்டியாளர்கள் ஆம், இல்லை என கூறவேண்டும் என கூறப்பட்டது.
இதில் சஞ்சீவ் பேசுகையில் தாமரை எப்போதும் இமான் அண்ணாச்சியை பகைத்துக்கொள்ள கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் என கூற பலரும் ஆமோதிக்கின்றனர். 

பின்னர் பேசிய பிரியங்கா கொஞ்சம் சூடாகத்தான் அனைவர் குறித்த கருத்தையும் பேசியிருந்தார். இறுதியில் பேசிய சஞ்சீவ் பிரியங்கா-தாமரை, அல்லது நிரூப் -பிரியங்கா இடையே விரைவில் பெரிய சண்டை நடக்கும் என கூறுகிறார்.

இதன் பிறகு நிரூப் தான் ஏன் விலகி செல்கிறேன் என்பதை பிரியங்காவிடம் விளக்க ஒருவழியாக ஒரு சைட் பிரச்சனை முடிந்தது. பின்னர் தாமரையை நாடகம் அடுக்கிறீர்கள் என பிரியங்கா கேட்க  இன்றும் பிக் பாஸ் வீட்டில் தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது. சண்டையில் பிரியங்கவுடன் கூட்டு சேரும் பாவனி தாமரையை வசைபாடுகிறார். இமான் அண்ணாச்சி தரைகுறைவாக பேசினால் கூட அமைதியாக இருக்கும் தாமரை நாங்கள் எதாவது கூறினால் சண்டைக்கு வருவது ஏன் என பல கேள்விகளை இருவரும் முன்வைத்து தாமரையை அலற விட்டு வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!
அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்