
சுமார் 10 வருடங்களுக்கு பின், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள முழு நீள காதல் படமான 'ராதே ஷ்யாம்' படத்தில் இருந்து, தரையோடு தூரிகை என்கிற ரொமான்டிக் பாடல் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள, பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து 'தரையோடு தூரிகை' எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஏற்கனவே இந்த படத்திலிருந்து காதல் ததும்பும் பாடலான 'தரையோடு தூரிகை' பாடல் வெளியானது.
இதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்திலிருந்து செகண்ட் சிங்கிள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.SochLiya என்னும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. காதல் நினைவுகளுடன் ஜோடிகள் பாடும் சோக கீதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.Musical Of Ages என குறிப்பிடப்படுள்ள இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படம் வரும் ஜனவரி 14 -ம் தேதி தெலுங்கு ஹிந்தி,தமிழ், கன்னடா,மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.