GP Muthu : ஆண்டவன் கைவிட்டுட்டான்... எதிர்பாரா மரணத்தால் கதறி அழும் ஜிபி முத்து - வைரலாகும் வீடியோ

Ganesh A   | Asianet News
Published : Dec 08, 2021, 07:22 PM IST
GP Muthu : ஆண்டவன் கைவிட்டுட்டான்... எதிர்பாரா மரணத்தால் கதறி அழும் ஜிபி முத்து - வைரலாகும் வீடியோ

சுருக்கம்

ஜிபி முத்து, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடியைச் சேர்ந்தவர் ஜி.பி.முத்து. இவர் டிக்-டாக் மூலம் மிகவும் பிரபலமானார். ஜி.பி.முத்துவின் டிக்டாக் வீடியோக்களை கலாய்ப்பதற்கு என்று சோசியல் மீடியாவில் பல குரூப் உலவிக்கொண்டிருந்தது. இதனால் கடுப்பான ஜி.பி.முத்துவும் அவர்களை வாயிற்கு வந்த வார்த்தையால் திட்டி பதிவிடும் வீடியோக்களும் வைரலாகி விடும்.

டிக்டாக் தடைக்கு பின் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் தன்னுடைய வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஜிபி முத்து. நெல்லை தமிழில் எதார்த்தமாக பேசுவது தான் இவருக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்துள்ளது. 

டிக் டாக் மூலம் பிரபலமான இவருக்கு தற்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  குறிப்பாக சன்னி லியோருடன் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளார். அந்த வீடியோவில், அனைவரையும் சிரிக்க வைத்த என்னை ஆண்டவன் கைவிட்டுட்டான். என்னுடைய உயிர் நண்பன் என்னை விட்டு போய் விட்டான் எனக் கூறி கண்கலங்கி அழுதுள்ளார் ஜி பி முத்து. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!