AK61-ல் அஜித்துக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை… 3வது முறையாக பாலிவுட் நடிகையை களமிறக்கும் போனி கபூர்!!

Published : Jan 21, 2022, 09:36 PM IST
AK61-ல் அஜித்துக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை… 3வது முறையாக பாலிவுட் நடிகையை களமிறக்கும் போனி கபூர்!!

சுருக்கம்

நடிகர் அஜித்தின் 61 ஆவது படத்தில் பாலிவுட் நடிகை தபுவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித்தின் 61 ஆவது படத்தில் பாலிவுட் நடிகை தபுவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் நடிப்பது வழக்கமான ஒன்று. அதில் புதிததாக கூறுவதற்கு ஒன்றிமில்லை. அந்த வகையில் நடிகர் அஜித்துடன் அண்மையில் வித்யா பாலன் நடித்தார். தன் நடிப்பால் பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக உள்ளவர் வித்யா பாலன். இவர் முதல் முறையாக தமிழில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் வித்யா பாலனுக்கு தமிழ் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் ரஜினியின் காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஹீமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். வலிமை படத்தில் அஜித்தின் காதலியாக ஷிமா குரோஷி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வெளியானால் தான் அஜித், ஹீமா குரேஷி இடையே உள்ள கெமிஸ்ட்ரி தெரியவரும். வலிமை படத்தில் தொடர்ந்து போனி கபூர், வினோத், அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி போடும் ஏகே 61 படத்திலும் பாலிவுட் நடிகையை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 61 ஆவது படத்தில் 51 வயதான பாலிவுட் நடிகை தபுவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தபு கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். தபு தமிழில் காதல் தேசம் தொடங்கி பல படங்களில் நடித்துள்ளார். பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ள தபு தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது இரண்டாவது முறையாக அஜித்துடன் கூட்டணி போடுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தொடர்ந்து மூன்று படங்களுக்கு அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகளை களம் இறங்கி வருகிறார் போனி கபூர். இது ரசிகர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை ஆனால் பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!