
அர்ஜூன் நடிப்பில் வெளியான "மதராசி" படம் மூலம் அறிமுகமாகி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "முனி" படம் மூலம் பிரபலமானவர் வேதிகா. இதையடுத்து "சக்கர கட்டி", "பரதேசி", “காவியத் தலைவன்” ஆகிய படங்களில் நடித்த வேதிகாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ஜங்கிள் படம் மட்டுமே வேதிகாவின் கைவசம் உள்ளது. ஹாரர் மற்றும் மர்மம் நிறைந்த இந்த படத்தில் வேதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த வேதிகா தற்போது அதே டெக்னிக்கை தொடர்ந்தால் பட வாய்ப்பு கிடைக்காது என்பதால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவிவிட்டார்.
கடந்த ஆண்டு மாலத்தீவில் பிகினி உடையில் வேதிகா நடத்திய போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலானது. ஸ்கீன் கலர் பிகினியில் கடற்கரையில் படுத்து உருண்டு பல வித போஸ் கொடுத்து அசத்தியிருந்தார். இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் வைத்துள்ள வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.
கடலுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள ஊஞ்சலில் உடல் முழுவதும் சொட்ட, சொட்ட நனைந்த படி கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். கிளாமரில் வேற லெவலுக்கு இருக்கும் இந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வந்தன.
இந்நிலையில் வேதிகா தற்போது பாலைவனத்தில் போட்டோ சூட் நடத்தி வெர்லெவலுக்கு சென்றுள்ளார்..கிழிந்த கீழாடை..கண்ணாடியால் பிணைக்கப்பட்ட மேலாடையை அவர் நடத்திய போட்டோ சூட் குறித்த வீடியோவை வேதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
மணல்வெளியில் வாழைத்தண்டென புரளும் வேதிகா ஒவ்வொரு போஸில் போதை ஏற்றுகிறார்..கவர்ச்சி சொட்ட சொட்ட அவர் கொடுத்த போஸால் பல வானமே சோலை வனமாக மாறியிருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.