
நடிகர் அஜித்குமாரும், நடிகை ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் முதன்முதலில் நடித்த திரைப்படம் அமர்க்களம். சரண் இயக்கிய இப்படத்தில் ஜோடியாக நடித்தபோது தான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஒருமுறை ஷூட்டிங்கின் போது காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஷாலினியை, அஜித் அரவணைப்போடு பார்த்துக்கொண்டாராம். இதனால் இம்பிரஸ் ஆன ஷாலினி அவர் மீது காதல் வயப்பட்டார்.
அமர்க்களம் பட ஷூட்டிங் சமயத்தில் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி, கடந்த 2000-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டனர். அப்போது தமிழ் சினிமாவின் டிரெண்டிங் ஹீரோயினாக இருந்து வந்தார் ஷாலினி. அவர் நடிச்ச படமெல்லாம் ஹிட் ஆனதால், அவருக்கு பட வாய்ப்புகள் வழங்க தயாரிப்பாளர்கள் கியூவில் காத்திருந்தனர். ஆனால் நடிகை ஷாலினி இனி நடிக்க மாட்டேன் என அறிவித்து சினிமாவை விட்டு விலகினார்.
இதையும் படியுங்கள்... Goundamani : ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்காக 8 மணி நேரம் டப்பிங் பேசி அசர வைத்த கவுண்டமணி
சினிமாவை விட்டு விலகிய பின்னர் இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த ஷாலினிக்கு கடந்த 2008-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டுள்ளனர். இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து அஜித் - ஷாலினி ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. ரசிகர்களால் குட்டி தல என செல்லமாக அழைக்கட்டு வரும் அக்குழந்தைக்கு ஆத்விக் என பெயரிட்டனர்.
அஜித்தும் ஷாலினியும் காதலிக்க தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாம். இதனை அவர்கள் இருவரும் நண்பர்களோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ரெசார்ட் ஒன்றில் அஜித்தும் ஷாலினியும் ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25 வருட காதலை கொண்டாடி இருக்கின்றனர். அப்போது அவர்களின் பேவரைட் பாடலான உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்கிற பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டு இருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அவங்க மேல இப்பவும் கிரஷ்.. அந்த நடிகையை சைட் அடிப்பதற்காகவே ஓட்டலுக்கு போவேன் - நடிகர் கார்த்தி சொன்ன சீக்ரெட்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.