Vijay Antony: இயேசுவை பற்றி தவறாக சித்தரித்தேனா? விஜய் ஆண்டனி கொடுத்த விளக்கம்!

By manimegalai aFirst Published Mar 16, 2024, 5:43 PM IST
Highlights

நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி 'ரோமியோ' பட விழாவில் இயேசு கிறிஸ்து மது குடிப்பார் என்கிற அர்த்தத்துடன் பேசியதாக கூறி, கிறிஸ்தவ சங்கம் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அதற்கு விஜய் ஆண்டனி அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார்.
 

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது 'ரோமியோ' என்கிற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியான போது, ஃபர்ஸ்ட் நைட் செட்டப்பில் கதாநாயகி, மிருணாளினி சரக்கு ஊற்றுவது போல் இருந்தது. இதைத் தொடர்ந்து 'ரோமியோ' பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்த போது, இதுகுறித்த கேள்வி எழுபட்டது.

இதற்க்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, மது என்பதில் ஆண் - பெண் என வேறுபடுத்தி பார்க்க கூடாது. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்றுதான். முந்தைய காலத்தில் இருந்தே மது என்பது இருந்து வருகிறது. ஆனால் அதற்கு காலத்திற்கு ஏற்ற போல், நாம் தான் பெயரை மாற்றிக் கொள்கிறோம். புராணங்களில் கூட இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார். ராஜராஜன் சோழன் காலத்தில், சோம பானம் என இதை குடித்து வந்தனர் என கூறினார்.

இவரின் பேச்சுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,  "திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி அவர்களுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் கடும் கண்டனம்". உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும் ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவகுமாரன் ஆகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும், இழிவுபடுத்தும் விதமாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என்று பொதுவெளியில் பேசி, கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே, வணக்கம்..

"நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, 2000 வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்தது தான். தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் அதை பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறி இருந்தேன்.

ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தியதால் உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டு இருப்பீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது. என்றும் அன்புடன் உங்கள் விஜய் ஆண்டனி, என தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

pic.twitter.com/xEBjwBqu7H

— vijayantony (@vijayantony)

click me!