தல பிறந்தநாளில் 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் ..! போனி கபூர் வெளியிட்ட அப்டேட்!

Published : Mar 15, 2021, 04:25 PM ISTUpdated : Mar 15, 2021, 04:41 PM IST
தல பிறந்தநாளில் 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் ..! போனி கபூர் வெளியிட்ட அப்டேட்!

சுருக்கம்

அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்த நிலையில் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார் போனி கபூர்.   

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரில்லை ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். இந்நிலையில் அஜித் ரசிகர்களை ஆசையை நிறைவேற்றும் விதமாக 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் குறித்து தகவலை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்த நிலையில் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார் போனி கபூர். 

மேலும் செய்திகள்: இரட்டை ஜடையில்... பாவாடை சட்டை அணிந்து... கிராமத்து மயிலாக மாறிய 'சித்தி 2 ' வெண்பா! ஹாட் போட்டோஸ்...
 

தல ரசிகர்கள், வலிமை அப்டேட்காக செய்த அட்டகாசத்தை சொல்லி அடங்காது,  பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பாரத பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. 

சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் கூட வலிமை அப்டேட் கேட்டு தல அஜித் ரசிகர்கள் கூச்சலிட்டது சோசியல் மீடியாவில் பல விமர்சனங்களை உருவாக்கியது. ஒருநிலையில் பொறுமை இழந்த அஜித், ரசிகர்கள் பொறுமை காக்கும் படி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

மேலும் செய்திகள்: பிரபலங்கள் அஞ்சலிக்கு பின் எஸ்.பி.ஜனநாதன் உடல் நல்லடக்கம்!
 

மேலும் செய்திகள்:சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!
 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மே மாதம் முழுவதும் ‘வலிமை’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vijay-Sangeetha Love Story : ரசிகையாக வந்து ராணியானவர்! விஜய்யின் 27 ஆண்டு கால 'மேஜிக்கல்' காதல் கதை
CM விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்! நீதிமன்றத்தில் நடந்தது என்ன? திடீர் திருப்பத்தின் பின்னணி!