
தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என தீயாய் இருந்த அரசியல் கட்சி அலுவலகங்கள் தற்போது பிரச்சாரம், வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை வெளியீடு என வாக்காளர்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கினாலும் இன்று நல்ல நாள் என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் இன்று தான் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் மயில்சாமி தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை வெள்ளம், கொரோனா பாதிப்பு போன்ற சமயங்களில் சென்னை மக்களுக்கு சத்தமில்லாமல் பல உதவிகளை செய்தவர் மயில்சாமி. அதனால் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அவர் களமிறங்க உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள மயில்சாமி, விருகம்பாக்கத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதையும் உறுதி செய்துள்ளார். அப்பகுதி மக்களுக்கு இக்கட்டான நேரங்களில் பல்வேறு உதவிகளை செய்ததால் மயில்சாமிக்கு அந்த தொகுதியில் செல்வாக்கு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.