
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகர் சூர்யா, இன்று முதல் 'சூர்யா 40 ' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது புதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் நடித்து தயாரித்திருந்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் 'சூரரை போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்ட நிலையில், தரமான 100 படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது. இந்நிலையில் சூர்யா அடுத்தடுத்து 'வாடிவாசல்', பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40வது படத்தில் பிஸியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக கடந்த மாதம் 9 ஆம் தேதி கூறியிருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு உள்ள சூர்யா, சமீபத்தில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் பள்ளி விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து இன்று முதல் சூர்யா தன்னுடைய 40 படமான பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, சூர்யாவின் மாஸ் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட முடியுடன் சூர்யா காளை ஒன்றில் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் இது 'வாடிவாசல்' படத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோவை அல்லது 'சூர்யா 40 ' படத்தின் வீடியோவா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இந்த வீடியோவை சூர்யாவின் ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.