‘இழப்பு ஈடு செய்ய முடியாதது’... கண் கலங்கிய சத்யராஜ்... உருக்கமான வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 14, 2021, 01:59 PM IST
‘இழப்பு ஈடு செய்ய முடியாதது’... கண் கலங்கிய சத்யராஜ்... உருக்கமான வீடியோ...!

சுருக்கம்

எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகியோர் நடிப்பில் உருவான இயற்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். முதல் படத்திலேயே தேசிய விருது வென்று திரையுலகின் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கி முடித்தார். அந்த படத்தின் எடிட்டிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட வந்த எஸ்.பி.ஜனநாதன் திடீரென மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

எப்போதும் போல எடிட்டிங் பணியில் இருந்து மதிய உணவிற்காக வீடு திரும்பிய எஸ்.பி.ஜனநாதன் வெகுநேரமாகியும் வரவில்லை, உடனே அவருடைய உதவியாளர் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதனை செய்தார்கள். 

எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று காலை அவருடைய உயிர் பிரிந்தது. எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எஸ்.பி.ஜனநாதனின் மறைவு குறித்து கண்கலங்கிய படி நடிகர் சத்யராஜ் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எஸ்.பி.ஜனநாதன் உயர்ந்த சிந்தனை உள்ள அற்புதமான இயக்குநர். முற்போக்கு சிந்தனையாளர். என்னுடைய இனிய நண்பர். அவருடைய மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது என இரங்கல் தெரிவித்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்