மூளையில் ரத்தக்கசிவு... விஜய்சேதுபதி பட இயக்குநர் சிகிச்சை பலனின்றி மரணம்... சோகத்தில் திரையுலகம்..!

Published : Mar 14, 2021, 11:20 AM IST
மூளையில் ரத்தக்கசிவு... விஜய்சேதுபதி பட இயக்குநர் சிகிச்சை பலனின்றி மரணம்... சோகத்தில் திரையுலகம்..!

சுருக்கம்

சிகிச்சை பலனின்றி இன்று காலை அவருடைய உயிர் பிரிந்தது. எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கி இருந்தார். படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 'லாபம்' படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பணியாற்றி வந்தார். 

கடந்த மார்ச் 11ம் தேதி எடிட்டிங் பணியில் இருந்து ஜனநாதன் வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறியுள்ளார். வெகு நேரமாக அவர் எடிட்டிங் பணி நடக்கும் இடத்திற்கு வராததால் அவருடைய உதவியாளர் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். 

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதனை செய்தார்கள். அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று அவர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவருடைய உயிர் பிரிந்தது. எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!