'குக் வித் கோமாளி' ரித்திகா மருத்துவமணையில் திடீர் அனுமதி..! பதறி போன ரசிகர்கள்!

Published : Mar 13, 2021, 06:54 PM IST
'குக் வித் கோமாளி' ரித்திகா மருத்துவமணையில் திடீர் அனுமதி..! பதறி போன ரசிகர்கள்!

சுருக்கம்

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் உள்ளே வந்த வேகத்தில் வெளியேறிய, சீரியல் நடிகை ரித்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் உள்ளே வந்த வேகத்தில் வெளியேறிய, சீரியல் நடிகை ரித்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைத்து பிரபலங்களுக்குமே, தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிடுகிறது. அந்த வகையில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் லேட்டாக உள்ளே வந்தாலும், லேட்டஸ்ட்டாக பல டிஷுகளை செய்து அசத்துவார் என, எதிர்பார்க்கப்பட்ட சீரியல் நடிகை ரித்திகா இரண்டே வாரத்தில் வெளியேறினார்.

இருப்பினும், அவர் பாலாவுடன் சேர்ந்து அடித்த காமெடிக்கு அளவே இல்லை.  இந்த நிலையில் ரித்திகா திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள், அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து அவருக்கு என்ன ஆனது என, ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது இதற்க்கு ரித்திகா பதில் கொடுத்துள்ளார். தனக்கு ஃபுட்  பாயிஸான் ஆகி விட்டதாகவும், மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்த பின்னர் உடல்நிலை நலமாக இருப்பதாக கூறியுள்ளார். அதே போல், தன்னை நலம் விசாரித்த ரசிகர்கள் அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார். ரித்திகாவின் இந்த பதிலுக்கு பின்னரே அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்த்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?