தேர்தலில் போட்டியிடுகிறாரா நடிகர் மயில்சாமி? பரபரப்பு தகவல்!

Published : Mar 13, 2021, 05:08 PM IST
தேர்தலில் போட்டியிடுகிறாரா நடிகர் மயில்சாமி? பரபரப்பு தகவல்!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான, மயில்சாமி தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான, மயில்சாமி தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர்களாக இருந்து அரசியலில் சாதித்தவர்கள் பலர்... இதற்கு மிகப் பெரிய உதாரணம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை கூறலாம்.  இவர்களை தொடர்ந்து, விஜயகாந்த், கமல், விஷால், கருணாஸ், ராதிகா, சரத்குமார், ஸ்ரீப்ரியா போன்ற பலர் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இம்முறை கட்சி துவங்கி தேர்தலை சந்திப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரசியலில் இருந்தே விலகுவதாக கூறி அதிற்சிகொடுத்தார்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அரசியல் குறித்து காரசாரமான கருத்துக்களை முன்வைத்து வரும் காமெடி நடிகர் மயில்சாமி நடிப்பை தாண்டி, சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து மயில்சாமி தரப்பில் இருந்து அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. 

மேலும் செய்திகள்: தனுஷ் பட நாயகியோடு... முன்னாள் முதல்வர் பேரனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! புகைப்படங்கள் இதோ...
 

வரும் சட்டமன்ற தேர்தலில், நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை வெள்ளம், கொரோனா பாதிப்பு போன்ற பல்வேறு இயற்க்கை பேரிடர்கள் வந்தபோது சத்தமில்லாமல் பல உதவிகளை செய்துள்ளார் நடிகர் மயில்சாமி. எனவே விருகம்பாக்கம் மக்களிடம் இவருக்கு செல்வாக்கு உள்ளதால்... சுயேச்சையாக தேர்தலில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையா? வதந்தியா? ஒருவேளை சுயேச்சையாக தேர்தலில் களம் கண்டால் மயில்சாமி வெற்றிபெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை