சூர்யாவை தொடர்ந்து மற்றொரு தமிழ் நடிகருக்கு கொரோனா..! திரையுலகினர் அதிர்ச்சி!

Published : Mar 13, 2021, 01:50 PM IST
சூர்யாவை தொடர்ந்து மற்றொரு தமிழ் நடிகருக்கு கொரோனா..! திரையுலகினர் அதிர்ச்சி!

சுருக்கம்

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்: இதுக்கு டவலை கட்டிக்கிட்டு போஸ் கொடுத்திருக்கலாம்! கவர்ச்சி உடையில் அதகளம் பண்ணும் அதுல்யா!
 

கொரோனா தொற்று சற்று ஓய்ந்ததை நினைத்து இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவரது அம்மா தெரிவித்தார். அதே போல் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் அதில் இருந்து குணமடைந்த நிலையில், தற்போது மற்றொரு முன்னணி நடிகர் ஆஷிஷ் வித்யாத்ரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆஷிஷ் வித்யார்த்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமானவர். நடிகர் என்பதை தாண்டி மோட்டிவேஷ்னல் பேச்சாளராகவும் உள்ளார். ஹிந்தியில் பிரபலமான இவர்,  தமிழில் நடித்த முதல் படமான 'தில்' படத்திலேயே...  டிஎஸ்பி ஷங்கர், என்கிற கதாபாத்திரத்தில் முரட்டு வில்லத்தனத்தை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து அர்ஜுன் நடித்த ஏழுமலை, விஜய் நடித்த பகவதி, தமிழன், கில்லி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் தமிழில் 'எக்கோ' என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: சீரியலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை தேவயானி..! 15 வருடத்திற்கு பின் மீண்டும் அதே நடிகருடன் இணைகிறார்!
 

இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில்,  "கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது தனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.  யார் என்னுடன் தொடர்பு கொண்டார்களோ, தயவுசெய்து நீங்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.  நான் இப்போது அறிகுறி இல்லாமல் இருக்கிறேன். நன்றாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை