சிவகார்த்திகேயனின் 'டான்' படம் குறித்து சுடசுட வந்த அப்டேட்!

Published : Mar 12, 2021, 07:35 PM IST
சிவகார்த்திகேயனின் 'டான்' படம் குறித்து சுடசுட வந்த அப்டேட்!

சுருக்கம்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படம் குறித்த சூப்பர் தகவலை சண்டை இயக்குனர் விக்கி தெரிவித்துள்ளார்.  

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படம் குறித்த சூப்பர் தகவலை சண்டை இயக்குனர் விக்கி தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம், இந்த மாதம் ரிலீசாக இருந்த நிலையில், தேர்தல் காரணமாக, 'ரமலான்' பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீயாய் நடந்து வருகின்றன. 

இதையடுத்து லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனும் ஒன்றாக இணைந்து 'டான்' என்ற படத்தை தயாரிக்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது மும்முரமாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்' படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த  ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். 

மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க, முன்னணி காமெடியனாக சூரி முனீஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், குக் வித் கோமாளி ஷிவாங்கி என பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில், இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் விக்கி. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,  ‘டான்’ படத்தின் சண்டைக்காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் குழுவினர் அனைவரும் எனர்ஜியாக இருப்பதால் அனைவருடனும் பணிபுரிவதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சியுடன் கூடிய சண்டை காட்சி உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். எனவே சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில் சண்டை காட்சிகளுக்கு குறைவிருக்காது என்பது தெரியவந்துள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!