
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய கூட்டணியை உறுதி செய்து, தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டன. அரசியல் கட்சி தலைவர்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் ஏற்கனவே வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசனை எதிர்த்து, பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி ஸ்ரீனிவாசன் யாரும் எதிர்பாராத விதமாக 'வலிமை' பட அப்டேட் கொடுத்துள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
பாஜக கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வானதி ஸ்ரீனிவாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த டுவிட்டுக்கு கமெண்ட் செய்திருந்த கோவை அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் எப்போது? என்று கேட்டிருந்த நிலையில். இந்த கேள்விக்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன் 'நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக 'வலிமை' அப்டேட் கிடைக்கும் தம்பி'. என்று யாரும் எதிர்பார்த்திடாத பதிலை கூறியுள்ளார். இவரது இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.