பிளான் போட்டு அஜித் ஆரம்பித்துள்ள புது பிஸ்னஸ்! இதுல இப்படி ஒரு உள்குத்தா?

Published : Dec 03, 2018, 05:07 PM ISTUpdated : Dec 03, 2018, 05:16 PM IST
பிளான் போட்டு அஜித் ஆரம்பித்துள்ள புது பிஸ்னஸ்! இதுல இப்படி ஒரு உள்குத்தா?

சுருக்கம்

தல அஜித் தற்போது 'விசுவாசம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் பொங்கல் திருநாள் அன்று வெளியிட உள்ளதாக ஏற்கனவே பட குழுவினர் உறுதி செய்துள்ளனர். 

தல அஜித் தற்போது 'விசுவாசம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் பொங்கல் திருநாள் அன்று வெளியிட உள்ளதாக ஏற்கனவே பட குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அஜித் மோத உள்ளார். கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'பேட்ட' திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அஜித் துவங்கி உள்ள புது பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்டு பலர் ஷாக் ஆகியுள்ளார். அப்படி என்ன பிசினஸ் ஆரம்பித்துள்ளார் என்று நினைக்கிறீர்களா? அஜித் தற்போது திருவான்மியூரில்  குடும்பத்துடன் வசித்து வந்த வீட்டை புதுப்பித்து வருகிறார். இந்த வீடு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டு வருகிறது. 

இந்த வீட்டில் அஜித் தற்போது பிரிவியூ தியேட்டர், டப்பிங் ஸ்டுடியோ எடிட்டிங் பணிகள், மற்றும் கிராபிக் பணிகள் ஆகிய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது போல் கட்டி வருகிறார். 

அஜித் இப்படி செய்வதிலும் ஒரு உள்குத்து உள்ளது பாஸ். இவை அனைத்தையும் அஜித் வீட்டிற்குள்ளேயே கட்டி விட்டால் எப்படியும் ஷூட்டிங் முடிந்த பிறகு, டப்பிங் உள்ளிட்ட எந்த பணிக்காகவும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் இல்லையா அதனால் தான் இப்படி ஒரு பிளான். அதே போல் இனி அஜித் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் இங்கு தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடிக்கும் இதன் மூலம் தனி வருவாயும் இவருக்கு வந்து சேரும். எப்படியோ தல பிளான் போட்டு செம பிசினஸ் ஸ்டார்ட் செய்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Idhayam Murali Review : இதயம் தொட்டதா? இரிடேட் பண்ணியதா? இதயம் முரளி விமர்சனம்
Velpari Movie : ஷங்கரின் வேள்பாரியில் சூர்யாவா? தனுஷா? யார் ஹீரோ?