புற்றுநோய் சிகிச்சை முடிந்து புது மனுஷியாக மும்பை திரும்பினார் சோனாலி பிந்த்ரே...

By vinoth kumarFirst Published Dec 3, 2018, 1:49 PM IST
Highlights

’என் இதயம் எங்கே இருக்கிறதோ அந்த இடத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன். இந்த உணர்வை என்ன வார்த்தைகளில் விவரிப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடிப்போயிருக்கிறேன்’ கேன்சர் சிகிச்சை முடிந்து நியூயார்க்கிலிருந்து மும்பை திரும்பிக்கொண்டிருக்கும் சோனாலி பிந்த்ரேவின் வார்த்தைகள் இவை.

’என் இதயம் எங்கே இருக்கிறதோ அந்த இடத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன். இந்த உணர்வை என்ன வார்த்தைகளில் விவரிப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடிப்போயிருக்கிறேன்’ கேன்சர் சிகிச்சை முடிந்து நியூயார்க்கிலிருந்து மும்பை திரும்பிக்கொண்டிருக்கும் சோனாலி பிந்த்ரேவின் வார்த்தைகள் இவை.

தமிழில் ’பம்பாய்’, ’காதலர் தினம்’,’கண்ணோடு கான்பதெல்லாம்’ ஆகிய படங்களிலும் இந்தியில் 50க்கும் மேற்பட்ட  படங்களிலும்  நடித்து பிரபலமானவர் சோனாலி பிந்த்ரே. இயக்குனரும், தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை மணந்த இவருக்கு ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய சோனாலி பிந்த்ரே, கடந்த ஜூலை மாதம் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்து திரையுலகினரையும், ரசிகர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தினார். மும்பையில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடையவேண்டி பிரார்த்தனைகளும் நடத்தினர்.

இந்நிலையில், புற்றுநோய்க்காக சோனாலி பிந்த்ரே நியூயார்க்கில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை மும்பை திரும்பினார்.

மும்பை விமான நிலையத்தில் சோனாலியுடன்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோல்டி பெல், “சோனாலி பிந்த்ரே நன்கு உடல் நலம் தேறி வந்து கொண்டிருக்கிறார். இனி மேற்கொண்டு சிகிச்சைக்காக நியூயார்க் செல்ல வேண்டியதில்லை. வழக்கமான பரிசோதனைகள் மட்டும் செய்துகொண்டால் போதும். புற்றுநோய் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும் என்பதால் செய்யவேண்டிய பரிசோதனை இது’ என்றார்.

click me!