அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் வானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து வித்தியாசமாக புரோமோட்ட செய்துள்ளது படக்குழு.
இயக்குனர் எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ளது, துணிவு திரைப்படம்.. ஜனவரி 11 ஆம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதே பொங்கல் பாண்டியை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படமும் வெளியாக உள்ளதால், இரு படத்திற்கும் படக்குழுவினர் தீவிரமாக புரமோஷன் செய்து வருகிறார்கள்.
விஜய்யின் வாரிசு படத்தின் போஸ்டரை, மெட்ரோ ரயிலில் ஒட்டி, படக்குழுவினர் புரோமோட் செய்த நிலையில் ஒரு படி மேலே சென்று 'துணிவு பட குழுவினர், வானத்தில் விமானத்தில் இருந்து குதித்து, பாராஷூட் மூலம் ஸ்கை டைவிங் செய்து 'துணிவு' படத்தை புரோமோட் செய்துள்ளது ரசிகர்களை மெய் சிலிர்க்க செய்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு இது குறித்த வீடியோ வெளியிடப்படும் என படக்குழு, டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் முழு வீடியோவும் வெளியாகி பார்ப்பவர்களை பிரமிக்க செய்துள்ளது.
திரையுலகில் 19 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா..! சோதனைகளும்... சாதனைகளும் ஒரு பார்வை!
அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் உருவாகி உள்ள நிலையில், இந்த படத்தின் அடுத்த கட்ட புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றை... படக்குழு ஜனவரி 1 ஆம் தேதி, நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே அஜித்தின் படங்களுக்கு இது போல் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை என்றாலும், இம்முறை... விஜய்யின் வாரிசு படத்திற்கு போட்டியாக அஜித்தின் 'துணிவு' படமும் ரிலீசாக உள்ளதால், இது போன்ற புரோமோஷன் பணிகளை நடத்த வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இது ஃபேமிலி டைம்... ஃபாம் ஹவுசில் குடும்பத்தோடு குதூகலம் பண்ணும் பிரகாஷ் ராஜ்! வைரலாகும் போட்டோஸ்!
இதற்க்கு முன்னர் அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டனில் உருவான, 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய இரு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், 'துணிவு' திரைப்படமும்... வேற லெவல் வெற்றிபெற வேண்டும் என்பதே அனைத்து அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை, மஞ்சு வாரியர், பாவனி, அமீர், சிபி சக்கரவர்த்தி போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
soaring high in the sky . Dubai skydiving promotions pic.twitter.com/uXdWWHcnC2
— Boney Kapoor (@BoneyKapoor)