Ajith : ஏ.கே - 61 படத்தில் நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதற்காக நீளமான தாடி, காதில் கடுக்கன் என மிரட்டலான லுக்கிற்கு மாறி உள்ளார் அஜித்.
வலிமை வசூல்
நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்தது. சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து அஜித் தான் நடிக்கும் 61-வது படத்திற்காக தயாராகி வந்தார்.
அடுத்தது AK 61
அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் தான் அஜித்தின் ஏ.கே - 61 படத்தையும் இயக்க உள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதற்காக நீளமான தாடி, காதில் கடுக்கன் என மிரட்டலான லுக்கிற்கு மாறி உள்ளார் அஜித்.
வில்லன் லுக்
சமீபத்தில் இவர் அந்த லுக்கில் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகின. இந்நிலையில், தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை நகைச்சுவை நடிகர் அம்பானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வைரல் போட்டோ
கடைசியாக அஜித்துடன் ஜி படத்தில் நடித்திருந்த அம்பானி சங்கர், அதன்பின் 18 ஆண்டுகள் கழித்து அஜித்தை சந்தித்தபோது எடுத்ததாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கருப்பு நிற பேண்ட் ஷர்ட்டில் அஜித் கெத்தாக போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது.
இதையும் படியுங்கள்... Dhanush : பிரிவுக்கு பின் முதன்முறையாக பேசிக்கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா! வைரலாகும் டுவிட்டர் உரையாடல்