
பிரபல நடிகையான சன்னி லியோன் தனது சமீபத்திய இன்ஸ்டா பதிவில் ரசிகர் ஒருவருடன் நிற்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். வீடியோவுக்கு பதில், அதற்கு சன்னி லியோனி கொடுத்து இருக்கும் தலைப்பு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோவில், "இங்க வாங்க, இதை கொஞ்சம் பாருங்க," என சன்னி லியோன் கூறுகிறார். உடனே கேமரா சன்னி லியோன் அருகில் அப்பாவியாக நின்று கொண்டிருந்த நபரின் இடது கையை நோக்கி கேமரா ஜூம் ஆனது. நொடிகளில் அந்த நபரின் கையை கேமரா க்ளோஸ் அப் வைக்க, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி காத்திருந்தது. க்ளோஸ் அப் ஷாட்டில் அந்த நபர் தனது கையில் சன்னி லியோன் பெயரை பச்சை குத்தியிருந்தது தெரியவந்தது.
இதோடு பெயருக்கு அருகில் இரண்டு ஹார்டின் போட்டு, அதன் இடையில் சன்னி லியோன் என பச்சை குத்தி இருந்தார். தனது பெயரை கையில் பச்சை குத்தியிருப்பதற்கு நன்றி தெரிவித்தார். சன்னி லியோன். இன்ஸ்டாவில் இந்த வீடியோவுக்கான தலைப்பில், "தொடர்ந்து நீங்கள் என்னை விரும்புவீர்கள் என நம்புகிறேன், ஏனென்றால் உங்களுக்கு வேறு வழியில்லை. உங்களுக்கு நல்ல மனைவி கிடைக்க வாழ்த்துக்கள்," என குறிப்பிட்டு இருந்தார்.
சன்னி லியோன் இயற்பெயர் கரன்ஜித் கௌர் வோஹ்ரா ஆகும். கனடாவை பூர்விகமாக கொண்ட இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் அடைந்தார். 40 வயதான சன்னி லியோன் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு சன்னி லியோன் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்தே இவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்பு கிடைத்தது.
திரையுலகில் சன்னி லியோன் ஜிசம் 2 திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ். 2, ஏக் பஹெலி லீலா மற்றும் மஸ்டிசாடி என ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இது மட்டுமின்றி அக்ஷய் குமார் நடிப்பில் உருவான சிங் இஸ் ப்லிங் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு பாடல் காட்சிகளிலும் சன்னி லியோன் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சன்னி லியோன் நடிப்பில் மலையாள திரையுலகில் ரங்கீலா, கோலிவுட்டில் வீரமாதேவி மற்றும் ஷீரோ, இந்தி மொழியில் உருவாகி வரும் ஹெலன் போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.