தடுமாறும் ரசிகர்கள்..! அஜித் கேட்ட ‘அரசியல்’ ரிப்போர்ட்.. மீண்டும் உருவாகிறதா ‘தல’ ரசிகர் மன்றங்கள்..!

By Vishnu PriyaFirst Published Apr 13, 2019, 2:43 PM IST
Highlights

தமிழகத்தில் சம கால சினிமா நாயகர்களில் அஜித்குமாருக்கு இணையாக ரசிக பலம் ரஜினிக்கோ, விஜய்க்கோ கூட இல்லை என்பதே உண்மை. மற்ற இருவரும் அவர்களை ‘ரசிகர் மன்றம்’ மற்றும் ‘மக்கள் மன்றம்’ எனும் பெயரில் அரசியலுக்காக ஒருங்கிணைத்து  வருகிறார்கள். ஆனால் அஜித்தோ அப்படி எந்த முயற்சியும் செய்யாமலிருந்தார், சொல்லப்போனால் சில வருடங்களுக்கு முன்பாக மன்றத்தை கலைத்தும் விட்டார். 

தமிழகத்தில் சம கால சினிமா நாயகர்களில் அஜித்குமாருக்கு இணையாக ரசிக பலம் ரஜினிக்கோ, விஜய்க்கோ கூட இல்லை என்பதே உண்மை. மற்ற இருவரும் அவர்களை ‘ரசிகர் மன்றம்’ மற்றும் ‘மக்கள் மன்றம்’ எனும் பெயரில் அரசியலுக்காக ஒருங்கிணைத்து  வருகிறார்கள். ஆனால் அஜித்தோ அப்படி எந்த முயற்சியும் செய்யாமலிருந்தார், சொல்லப்போனால் சில வருடங்களுக்கு முன்பாக மன்றத்தை கலைத்தும் விட்டார். 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் இமாலய வெற்றியானது, தமிழக அரசியல்வாதிகளை மிக முழுமையாக அஜித் ரசிகர்களின் பக்கம் திருப்பியிருக்கிறது. இத்தனை லட்சம் ரசிக வெறியர்களா? இந்த வாக்கு வங்கி அப்படியே நம் பக்கம் திரும்பினால் எவ்வளவு எளிதாக வெற்றிக்கு உதவும்! என்று யோசித்தவர்கள் அதற்கான முயற்சியிலும் இறங்கினர். 

பொதுவாக தல ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு அஜித் மீதிருந்த பாசத்துக்காக, அவர் சொல்லாமலேயே அ.தி.மு.க.வுக்குதான் வாக்களிப்பார்கள். ஆனால் ஜெ., மறைந்துவிட்ட நிலையில், அஜித்தின் வாக்கு வங்கியை உடைத்திருக்கிறது தி.மு.க. கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலுமே உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினரின் மூவ் மூலம் ஸ்டாலினை ஆதரிக்க பெருமளவு அஜித் ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர். மீதி பேரோ வழக்கம்போல் அ.தி.மு.க.வை ஆதரிக்கும் நிலையில், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் சிலவற்றில் தினகரனின் அ.ம.மு.க.வினரும் அஜித் ரசிகர்களின் வளைத்துள்ளனர். ஆக மொத்தத்தில் அஜித்தின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக பல கட்சிகளின் ஆதரவாளர்களாக சிதறிக் கிடக்கின்றனர்.

 

தேர்தலை மையமாக வைத்து இப்படி தன் ரசிகர்கள் பயன்படுத்தப்படுவதும், பல ரசிகர்கள் நிலையான நல்ல முடிவு எடுக்க தடுமாறுவது பற்றியும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அஜித்தின் காதுகளுக்கு போனது. துவக்கத்தில் இதை பெரிதாய் கண்டுகொள்ளாதவர், சில மணி நேரங்கள் கழித்து ‘ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னோட சாலிட் (நிலையான) ரசிகர்களாக மொத்தம் தமிழகம் முழுக்க எத்தனை லட்சம் பேர் இருக்கிறாங்க? அவங்கள்ள இப்ப எவ்வளவு பேர் எந்தெந்த கட்சியை ஆதரிக்கிறாங்க? இது பத்தி பக்கா ரிப்போர்ட் வேணும்.’ என்று தன் பி.ஆர்.ஓ.வான சுரேஷ் சந்திராவுக்கு கட்டளையிட்டுள்ளார். 

மாவட்ட ரீதியாக மளமளவென கணக்கெடுப்புகள் துவங்கியுள்ளன. வெளிப்படையாக இல்லாமல், சைலண்டாகவே நடக்கிறது இந்த வேலை. ஆனாலும் உளவுத்துறை மூலம் அரசும், ஸ்டாலினும் இதை ஸ்மெல் செய்துவிட்டனர். அவர்களின் ஒரே கவலை ‘அஜித் இந்த சர்வேவை எடுப்பது வெறும் தகவலுக்கா? அல்லது மீண்டும் ரசிகர் மன்றத்தை உருவாக்கவா! ஒருவேளை மன்றத்தை உருவாக்கினால் அதை நாளடைவில் மக்கள் மன்றமாக மாற்றி பின் அரசியலுக்கு வந்துவிடுவாரே! மத்த மாஸ் நடிகர்கள் மாதிரி இல்லாமல், உண்மையிலேயே தன்னை சுத்தி உள்ளவங்களோட நல்லதுக்காக யோசிக்கிற மனுஷனாச்சே அஜித். அதனாலதானே குடும்பம் குடும்பமா அவரை கொண்டாடுறாங்க.’ என்பதுதான். ரசிகர் மன்றமோ அதன் பின் அரசியலோ! அஜித் என்ன செய்தாலும் தமிழக அரசியல் கலங்கும் என்பதில் எந்த டவுட்டுமில்லை. நீ ஆடு தல!

click me!