கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் திருட்டுக்கதையா?...இயக்குநர் சி.வி.குமார் மீது பாயும் பத்திரிகையாளர்...

By Muthurama LingamFirst Published Apr 13, 2019, 1:25 PM IST
Highlights

’Gangsofமெட்ராஸ்’ படம் தனது நாவலின் அப்பட்டமான திருட்டு என்று தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய சி.வி.குமார் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் பத்திரிகையாளர் கே.என்.சிவராமன்.
 

’Gangsofமெட்ராஸ்’ படம் தனது நாவலின் அப்பட்டமான திருட்டு என்று தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய சி.வி.குமார் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் பத்திரிகையாளர் கே.என்.சிவராமன்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் சற்றே நீண்ட குழப்பமான பதிவை எழுதியுள்ள அவர்,...நன்றி சி.வி.குமார். பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்காமல் அனுமதியும் பெறாமல் எனது 'மாஃபியா ராணிகள்' நூலின் ஒரு போர்ஷனை எடுத்து ஆண்டதற்கும் அப்பகுதிக்கு திரைவடிவம் கொடுத்ததற்கும் :-)

உண்மையில் அது ஒரிஜினல் சரக்கல்ல. பத்திரிகையாளர் ஹுசைன் சைதி எழுதிய இரு ஆங்கில நூல்களையும் 1980 முதலான ஆங்கில பத்திரிகைகள் ப்ளஸ் இங்கிலீஷ் நியூஸ் பேப்பர்ஸ் செய்திகளையும் அடிப்படையாக வைத்து டிரமடைஸ் செய்யப்பட்ட டிரான்ஸ்கிரியேஷனே 'மாஃபியா ராணிகள்'.தினகரன் நாளிதழின் ஞாயிறு இணைப்பான 'தினகரன் வசந்தம்' பத்திரிகையில் 97 வாரங்களுக்கும் மேல் வெளியாகி 'சூரியன் பதிப்பகம்' வழியே நூலாகவும் வெளிவந்திருக்கிறது.

வருத்தம் ஏதும் இல்லை. உள்ளூர மகிழ்ச்சிதான். ஏனெனில் ஹுசைன் சைதி நூலில் இருக்கும் செய்தியைவிட அதை டிரமடைஸ் செய்த எனது வெர்ஷனையே வசனங்கள், ப்ளாக்ஸ் முதல் பயன்படுத்தி இருக்கிறீர்கள், மும்பைக்கு பதில் மெட்ராஸ் என களம் மாற்றி.அந்த வகையில் எனது கிரியேட்டிவிட்டியை (!) மதித்து மரியாதை செய்ததற்கு நன்றி :-)

நல்லா இருங்க, நீங்களும் பெயர் குறிப்பிடாமல் உங்களுக்கு ஓர்க் பண்ணி கொடுத்த எனது நண்பர்களும் :-)

இந்தப் படம் ஏன் பெரும் வெற்றி அடையாமல் போனது என்பதை உங்களை எப்போதாவது சந்திக்கும்போது விளக்குகிறேன். பிகாஸ், இன்ஸ்ஃபையர் (காப்பி :-) ) ஆகி வாந்தி எடுப்பவர்களை விட மென்று தின்றவர்களுக்கு பிசிறின்றி செரிமானம் ஆகும் :-அதற்குள் இன்னொருவரின் உழைப்பை கமுக்கமாக சுரண்டாமல் இருங்கள். தொடர் வாந்தி பெரும் நோயின் அறிகுறி :-)சி.வி.குமாருக்கு கோஸ்ட் ரைட்டர்ஸாக இருக்கும் எனதருமை நண்பர்களே... தொடரட்டும் உங்கள் சேவை :-)...என்று பதிவிட்டுள்ளார் அவர்.

click me!