நடிகர் சங்கத் தேர்தல் தேதி...மீண்டும் போட்டியிடும் விஷால்...

Published : Apr 13, 2019, 01:01 PM IST
நடிகர் சங்கத் தேர்தல் தேதி...மீண்டும் போட்டியிடும் விஷால்...

சுருக்கம்

ஏற்கனவே ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தள்ளிப்போடப்பட்ட நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடத்தப்படக்கூடும் என அச்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த  தேர்தலில் விஷால் அணியினர் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு உள்ளனர்.   

ஏற்கனவே ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தள்ளிப்போடப்பட்ட நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடத்தப்படக்கூடும் என அச்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த  தேர்தலில் விஷால் அணியினர் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு உள்ளனர். 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் பொதுக்குழுவை கூட்டி தேர்தலை தள்ளி வைத்தனர். 

தற்போது நடிகர் சங்க கட்டிட வேலைகள் 95 சதவிகிதம் முடிவடைந்த நிலையில்  இறுதிக் கட்டத்தில் உள்ளன. தரைத்தளத்துடன் சேர்த்து  மூன்று மாடிகளில் இந்த கட்டிடம் உருவாகி உள்ளது. நடிகர் சங்க அலுவலகம், கருத்தரங்கு கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன.

அடுத்து உள் அலங்கார வேலைகள் நடக்க உள்ளன. செலவு ரூ.30 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மீண்டும் நிதி திரட்ட நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலைவிழாவை விரைவில் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜூலை மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின்னர் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தலை நடத்தும் தேதியை முடிவு செய்கிறார்கள். நட்சத்திர கலைவிழாவை எங்கு எப்போது நடத்துவது என்பதையும் அறிவிக்க உள்ளனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?