”கமலும் சீமானும் தற்பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள்”...சீறும் சேரன்...

Published : Apr 13, 2019, 10:01 AM IST
”கமலும் சீமானும் தற்பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள்”...சீறும் சேரன்...

சுருக்கம்

நாம் தமிழர் சீமானின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான சேரன், கமல், சீமான் ஆகிய இருவரின் தேர்தல் பிரச்சாரம் மிகவும் சொதப்பலாக இருப்பதாகவும் அவர்கள் தேறுவதற்கு வாய்ப்பில்லை என்பது போலவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் சீமானின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான சேரன், கமல், சீமான் ஆகிய இருவரின் தேர்தல் பிரச்சாரம் மிகவும் சொதப்பலாக இருப்பதாகவும் அவர்கள் தேறுவதற்கு வாய்ப்பில்லை என்பது போலவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாள்களே உள்ளதால் இறுதிக்கட்ட பிரசார வேலைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கரு.பழனியப்பன், ராஜுமுருகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட இயக்குநர்கள் திமு.கவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதுபோன்ற அழைப்புகள் எதுவும் தனக்கு வராத கோபமோ என்னமோ கமலையும் சீமானையும் தாக்கிப் பேசியுள்ளார் இயக்குநர் சேரன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்...‘‘எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க. யாரும் தீர்வை நோக்கி நகரவே இல்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும். யாரை நம்பி மாற்றம் தேடுவது. சாதாரண வாக்காளனாய் எனக்குத் தோன்றியது.

மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மநீம, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களை கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள்.. தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள்தானே..என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

kalyani Priyadarshan : அவ்ளோ அழகு! ஸ்டன்னிங் லுக்கில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Gabriella Charlton : சுடிதாரில் இவ்ளோ அழகை காட்ட முடியுமா? சீரியல் நடிகை கேப்ரியால்லாவின் போட்டோஸ் பாருங்க!