முகூர்த்த நேரம் வந்தும் தாலி காட்டாமல் மகனுக்கு காத்திருந்த விசாகன்! சௌந்தர்யா வெளியிட்ட தகவல்!

Published : Apr 12, 2019, 07:15 PM IST
முகூர்த்த நேரம் வந்தும் தாலி காட்டாமல் மகனுக்கு காத்திருந்த விசாகன்! சௌந்தர்யா வெளியிட்ட தகவல்!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த இவர்களுடைய திருமணத்தில், பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்தை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த், கணவருடன்  ஹனிமூன் சென்ற புகைப்படங்கள், கணவருடன் குழந்தை வேத் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை  வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவர் விசாகன் இருவரும் சேர்ந்து, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர்.

அதில் முதல் முறையாக சௌந்தர்யா - விசாகன் சந்திப்பு முதல் திருமணம் வரை நடந்த ஸ்வாரஸ்யமான  தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த பேட்டியில், சௌந்தர்யா ரஜினிகாந்த்... கணவர் விசாகன் மகன் வேத் மீது வைத்திருக்கும் அன்பு குறித்து கூறியுள்ளார். மேலும் மகனின் சம்மதத்தை பெற்ற பின்பு தான் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் திருமண நேரத்தில் நடந்த சம்பவம் குறித்தும் கூறியுள்ளார். அதாவது திருமண முகூர்த்த நேரம் வந்ததும், திடீர் என வேத் அங்கு இல்லை. அனைவரும் அவனை தேடினர். அப்போது வேத் வராமல் தாலி கட்ட மாட்டேன் என விசாகன் கூறிவிட்டார் என சௌந்தர்யா கூறியுள்ளார். பின் வேத் அந்த இடத்திற்கு வந்த பிறகு தான் தாலி கட்டியதாக தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி