
பீஸ்ட் திரைப்படம், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
பீஸ்ட் வெற்றியா? தோல்வியா?
இந்த படம் அஜித்தின் வலிமை மற்றும் நாளை ரிலீசாக உள்ள யாஷின் கேஜிஎஃப் 2 படத்தை விட அதிக வரவேற்பு கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
சன் பிக்சர் தயாரிப்பில், ரூ 190 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே பட்ஜெட் தொகையான பெற்று தந்தது. மேலும், கூடுதலாக 57 கோடிகளை லாபமாக பெற்று விட்டது.
ரசிகர்களின் கொண்டாட்ட படம் பீஸ்ட்:
ரசிகர்களின் எதிர்பார்த்தது போலவே, படத்தின் டிக்கெட் விற்பனையும் துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன. அதன்படி, பீஸ்ட் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் மட்டும் இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என கூறப்படுகிறது.
கலவையான விமர்சனங்கள்:
ஆனால், அதேசமயம் பீஸ்ட் திரைப்படம் பல மோசமான விமர்சனங்களையும் பெற்று வருவதை பார்த்து வருகிறோம். விஜய் ரசிகர்களிடம் இருந்தே இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
சில விமர்சகர்கள் பீஸ்ட் படத்திற்கு 3, 2.5 என்ற அளவிலேயே ரேட்டிங் கொடுத்துள்ளனர். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதில், மீம்கள் போட்டு சிலர் பீஸ்ட் படத்தை கலாய்த்து வருகின்றனர்.
அஜித்தின் ரசிகர்களின் குசும்புத்தனம்:
இந்நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படம் Disaster என பல பதிவுகளை வெளியிட்டு விஜய் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளனர். அத்துடன், விஜயை கலாய்க்கும் வகையில் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நொந்து போன விஜய் ரசிகர்கள், பீஸ்ட் படத்திற்கு ஆதரவான கமெண்ட்கள், ரசிகர்களின் விமர்சனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.