ஜெயிச்சுட்டீங்க... சொன்னபடி வலிமை அப்டேட் கேட்டு சொல்லுங்க! வானதி ஸ்ரீனிவாசனிடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை!

Published : May 06, 2021, 11:51 AM IST
ஜெயிச்சுட்டீங்க... சொன்னபடி வலிமை அப்டேட் கேட்டு சொல்லுங்க! வானதி ஸ்ரீனிவாசனிடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை!

சுருக்கம்

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் களம் கண்ட வானதி ஸ்ரீனிவாசனிடம், அஜித் ரசிகர்கள் தற்போது வலிமை அப்டேட் கேட்டு, சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.  

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் களம் கண்ட வானதி ஸ்ரீனிவாசனிடம், அஜித் ரசிகர்கள் தற்போது வலிமை அப்டேட் கேட்டு, சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வந்த போது,  நடிகர் கமலஹாசனை எதிர்த்து, பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசனிடம் யாரும் எதிர்பாராத விதமாக அஜித் ரசிகர்கள் 'வலிமை' பட அப்டேட் கேட்டிருந்தனர்.

அதாவது பாஜக கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வானதி ஸ்ரீனிவாசன் டுவிட் ஒன்றை போட்ட போதுதான், கோவையை சேர்ந்த  அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் எப்போது? என்று கேள்வி எழுப்புனார்.

மேலும் செய்திகள்: 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடல் பிரபலம் கோமகன் கொரோனாவிற்கு பலி...!
 

இதற்க்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன் 'நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக 'வலிமை' அப்டேட் கிடைக்கும் தம்பி' என்று பதில் கொடுத்தார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2 ஆம் தேதி எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமலஹாசனுக்கும், பாஜக கட்சி சார்பாக போட்டியிட்ட, வானதி ஸ்ரீனிவாசனுக்கும் இடையே கடைமையான போட்டி நிலவி வந்த நிலையில் கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையில், 1700  வாக்குகள் வித்தியாசத்தில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார்.

மேலும் செய்திகள்: 'ஒருதலை ராகம்' பட தயாரிப்பாளர் இ.எம்.இப்ராஹிம் காலமானார்..! டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க இரங்கல்..!
 

இதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கோவை தெற்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்கள், மற்றும் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளித்த, பிரதமர் மோடி, மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ட்விட் போட்டிருந்தார். இதற்க்கு அஜித் ரசிகர் ஒருவர் "வாழ்த்துக்கள் என கூறி, கொஞ்சம் வலிமை அப்டேட் கேட்டு சொல்லுங்கள் என கூறியுள்ளார். இந்தப்பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!