கொரோனாவால் பிரபல இயக்குநர் வீட்டில் நடந்த சோகம்... கதறி துடிக்கும் குடும்பத்தினர்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 06, 2021, 11:51 AM IST
கொரோனாவால் பிரபல இயக்குநர் வீட்டில் நடந்த சோகம்... கதறி துடிக்கும் குடும்பத்தினர்...!

சுருக்கம்

கொரோனா தொற்றால் பிரபல இயக்குநரின் தந்தை மரணமடைந்த செய்தி கோலிவுட்டை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் செல்வா. DD பொதிகை டி வி யில் பரபரப்பாக பேசப்பட்ட நீலா மாலா , சித்திரபாவை தொடர்களை இயக்கிய  செல்வா, முதன் முதலில் இயக்கிய தலைவாசல் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. 

 

 

தல அஜித்தை அறிமுகப்படுத்திய அமராவதி படத்தை இயக்கியவர். கர்ணா, புதையல், பூவேலி, உன்னருகே நானிருந்தால், ஜேம்ஸ்பாண்டு, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், நான் அவனில்லை, தோட்டா போன்ற வெற்றிப் படங்களான 25படங்களுக்கு மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 

 

சமீபத்தில் அரவிந்த் சாமியை வைத்து வணங்கா முடி என்ற படத்தை இயக்கி முடித்திருந்த செல்வா. அதன் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில், அவரது வீட்டில் மிகவும் துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

 

 

இயக்குநர் செல்வாவின் தந்தை பக்தவச்சலம். அவருக்கு வயது 85. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பக்தவச்சலம் பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.15 மணி அளவில் காலமானார். காலை முதலே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் பாண்டு, ஆட்டோகிராப் பட புகழ் கோமகன் ஆகியோர் மரணமடைந்த நிலையில், இயக்குநர் செல்வாவின் தந்தை மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!