
ஐஸ்வர்யா ராஜேஷ் வருடத்தில் அதிக படங்கள் நடிக்கும் நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிக்கும் பத்து படங்களில் எட்டு படங்களாவது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து விடுகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் இவர் அடுத்த நயன்தாரா என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார். அந்த அளவுக்கு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா படத்தில் கால்டாக்சி டிரைவராக நடித்த வருகிறார். பிகின்ஸ் லீன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 18 ரூல்ஸ் பேனரில் சவுத்ரி தயாரிக்கிறார்.
அதோடு கண்ணன் இயக்கிய தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்திடன் தமிழ் ரீமேக்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நாயகி. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் விடுமுறைக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றுள்ளார். ஈபில் டவர் அருகே இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகின.
மேலும் செய்திகளுக்கு...பாலிவுட் நாயகியாகவே மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..லோ நெக்..தொடை போஸ் என கலங்கடிக்கிறாரே!
முன்னதாக சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்திற்குப் பிறகு தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராஜேஷிற்கு பிற மொழிகளிலும் ரேட்டிங் அதிகமாக உள்ளது.
அதன்படி தெலுங்கில் பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதோடு பாலிவுட்டிலும் இவருக்கு வாயில் திறந்து உள்ளன. சின்னத்திரை நடன ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு அல்ட்ரா சிட்டி செய்து வருகிறார். தற்போது தமிழில் மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்கும், புலி மாடா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் தற்போது இவரது ஒர்க் அவுட் வீடியோ ஒன்று பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.