கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை அன்னே ஹெச் உடல்நிலை மிகவும் கவலை கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரம் உறுதிசெய்துள்ளது.
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை அன்னே ஹெச் உடல்நிலை மிகவும் கவலை கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரம் உறுதிசெய்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரம் கார் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் உயிரிழந்தார். அவருக்கு வயது 53. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக தகவல் வெளியாகி வந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரம் உறுதி செய்த பின்னர், அவரது குடும்பத்தினரும் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த நடிகை, அன்னேவின் மூத்த மகன் ஹோமரும் இது குறித்து கூறுகையில், "எனது சகோதரர் அட்லஸும் நானும் எங்கள் அம்மாவை இழந்து விட்டோம். ஆறு நாட்கள் எங்கள் அம்மாவை காப்பாற்ற போராடிய நிலையில் அவர் உயிரிழந்தார். அவரை மிகவும் மிஸ் செய்வதாக உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: ஆர்யா எங்கே... இரவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சாயிஷா..! எங்கு தெரியுமா..?
இவரது திடீர் மறைவுக்கு, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் எலன் டிஜெனெரஸ் ஆகியோர் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் மறைந்த ஹாலிவுட் நடிகைக்கு அஞ்சலி செலுத்தினர். பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "அன்னே ஹெச்சின் மறைவால் வாடும் அவரது பிள்ளைகள் , குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் ஒரு அழகான நபரை இழந்துள்ளோம். நீங்கள் எப்போதும் எங்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு எப்போதுமே என் இதயத்தில் ஒரு சிறப்பு இடம் உண்டு என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: இது எங்க போய் முடிய போகுதோ..? கேரவனுக்குள் மணக்கோலத்தில் கொஞ்சி குலாவும் அமீர் - பாவனி! பொங்கும் நெட்டிசன்கள்
பிரியங்கா சோப்ரா நடித்த ஹாலிவுட் தொடரான, 'குவாண்டிகோ' என்ற தொடரில் ஆனி ஹெச் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.