மனதை கவர்ந்த மயிலின் சூப்பர் ஹிட் பாடல்கள் லிஸ்டில் சில...

By Akshit Choudhary  |  First Published Aug 13, 2022, 4:42 PM IST

இன்று பிறந்தநாள் காணும் மறைந்த ஸ்ரீதேவி- கமல் ஜோடியின் சூப்பர் ஹிட் அடித்த பாடல்கள் சிலவற்றை இங்கு காணலாம்...


பிளாக்பஸ்டர் ஹிட்டான வாழ்வே மாயத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடலில் கமல்ஹாசனும் , ஸ்ரீதேவியும் நடித்த டூயட் பாடல். இந்த  பாடலுக்குகங்கை அமரன் இசையமைத்துள்ளார்.

 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு... 16 வயதினிலே துவங்கி இங்கிலீஷ் விங்கிலீஷ் வரை...மயிலின் சிறந்த திரைப்பயணம் இதோ!

கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ஜெய்சங்கர் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் தமிழ் திரைப்படமான வாழ்வே மாயத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சூப்பர் ஹிட் ரொமாண்டிக் பாடலான நீல வான ஓடையில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியின் அற்புத நடிப்பில் கங்கை அமரன் இசையில். 

 

வறுமையின் நிறம் சிவப்பு படத்திலிருந்து சிப்பி இருக்குது  முத்தும் இருக்குது பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாட  விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு... அம்மாவை நினைத்து ஏங்கும் ஜான்விகபூர்...ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் மகள்களின் உருக்கமான பதிவு

 

ரஜினிகாந்த் , ஸ்ரீதேவி நடித்த ஜானி படத்திலிருந்து என் வானிலே ஒரே வெண்ணிலா பாடலை என் வானிலே ஒரே வெண்ணிலா பாடலுக்கு இளையராஜா இசையமைக்க ஜென்சி குரல் கொடுத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.  

மேலும் செய்திகளுக்கு...hansika Motwani : கிளாமர் உடையில் பர்த்டே பேபி..ஹன்ஷிகாவின் பார்டி மோட் !

 

மீண்டும் கோகிலாவின் சின்னஞ்சிறு வயதினிலே.. பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.சைலஜா படியிருந்தனர். இந்த படத்தை ஜி.என். ரங்கராஜனால் இயக்கப்பட்டது. பெண் பார்க்கும் படலத்தில் அமைந்த இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம்...

 

ஸ்ரீதேவி மாறுபட்ட ரோலில் நடித்திருந்த மூன்றாம் பிறை படத்திலிருந்து கண்ணே கலைமானே பாடல் இன்றளவும் காதல் தாலாட்டாக  வலம் வருகிறது.யேசுதாஸ் குரலில் இளையராஜா இசையமைப்பில் சூப்பர் ஹிட் அடித்திருந்தது.

 

 

click me!