எனக்கு வேண்டாம்... நமக்கு வேண்டாம்..! போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

Published : Jun 24, 2023, 07:23 PM IST
எனக்கு வேண்டாம்... நமக்கு வேண்டாம்..! போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

சுருக்கம்

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மைலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார்.  

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 'போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை' எனும் பெயரில் காவல்துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போதை பொருளுக்கு எதிரான 'எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்' எனும் விழிப்புணர்வு வாசகத்தை கல்லூரி மாணவிகள்  ஒன்றிணைந்து முழங்கினர். 

மேலும் போதை பொருளுக்கு எதிராக பொதுமக்களிடத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணற் சிற்பம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை சென்னை மாநகராட்சியின் உணவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளரான ராதாகிருஷ்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். 

விரைவில் ஆரம்பமாகும் பிக்பாஸ் 7! ஆடிஷனில் கலந்து கொண்ட 5 பிரபலங்கள் பற்றி கசிந்த தகவல்.!

இதில்சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் கூடுதல் ஆணையர் லோகநாதன்,  சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் ஆர். வி. ரம்யா பாரதி, சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் திஷா மிட்டல், சென்னை கிழக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் ரஜத் சதுர்வேதி, மயிலாப்பூர் காவல் மாவட்டத்தின் இணை ஆணையர் சகாதேவன், மயிலாப்பூர் காவல்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர். இவர்களுடன் கல்லூரி மாணவிகள் போதை பொருளுக்கு எதிராக பாடல்கள் , மைம் எனப்படும் கலை வடிவம், சிறு நாடகம் போன்றவற்றின் மூலமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

தனுஷுக்கு ஜோடியாகிறாரா அமலா பால்? எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் வெளியான தகவல்!

இந்நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில் , '' இங்கு கூடியிருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தங்களது வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் சந்தோஷமாக ‌ செலவழித்து வருகிறீர்கள் என நம்புகிறேன். ஆனால் இந்த சமூகத்தில் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகரித்து வருகிறார்கள். உங்களுடைய நண்பர்களோ அல்லது தோழிகளோ யாரேனும் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தால், அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்து அவர்களை இதிலிருந்து மீட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை போதை பொருளுக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் உங்களிடம் இருக்கிறது.  

இந்த படம் ஓடவில்லை என்றால் சினிமாவை விட்டே விலகி விடுவேன் என சவால் விட்ட த்ரிஷா! பயில்வான் கூறிய தகவல்!

மேலும் போதை பொருளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விழிப்புணர்வு வாசகத்தை அனைவரும் ஒன்றிணைந்து கூறுவோம் 'எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்'. போதை பொருளை பயன்படுத்தாமல்.. போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வில் முழுமையாக ஈடுபட்டு சமூக நலனை காப்போம்.'' என்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!