ரஜினி படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

By vinoth kumarFirst Published Sep 30, 2018, 11:34 AM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில்  நடிகையும், உலகிஅழகியுமான ஐஸ்வர்யா ராய் குண சித்ரவேடத்தில் நடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில்  நடிகையும், உலகிஅழகியுமான ஐஸ்வர்யா ராய் குண சித்ரவேடத்தில் நடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. சிவாஜி, எந்திரன் திரைப்படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற இயக்குனர் ஷங்கரும் இணைந்திருக்கும் திரைப்படம் 2.0. 2010 ஆம் ஆண்டு வெளியாகி மெகாஹிட் ஆனதுடன், இந்திய திரையுலகமே பிரமித்த எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் தயாராகியுள்ளது. 

சுமார் 600 கோடிரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில், ரஜினிகாந்துடன், பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ள அக் ஷய் குமார் இணைந்திருப்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஷங்கரின்ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்திருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. முழுக்க முழுக்க 3 டிகேமராவில் எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் 2.0 படைத்துள்ளது. படத்தின் டிரெய்லரும் அண்மையில் வெளியாகி கோடிக்கணக்கான முறையூடியூபில் பார்க்கப்பட்டு சாதனைபடைத்த வண்ணம் உள்ளது.

 

நவம்பர்29ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் ஒரே ஒருகுறை ரசிகர்களை ஆட்கொண்டிருந்தது. அது என்னவென்றால் எந்திரன் திரைப்படத்தில் நடித்த உலக அழகிஐஸ்வர்யா ராய், அதன் தொடர்ச்சியான பாகமான உருவாகியுள்ள 2.0 வில்இல்லாதது தான். எந்திரனில்வசீகரனனின் காதலியாக சனா என்ற கதாப்பாத்திரத்தில் வசீகரித்தஇவருக்கு,2.0வில் வேலை இல்லையா என்று ரசிகர்கள் பலரும் மனதளவில் குமுறி வருகின்றனர். 

அந்தக் கவலையை போக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவல் என்னவென்றால், 2.0 திரைப்படத்தில்ஐஸ்வர்யா ராய் குணசித்ரகதாப் பாத்திரத்தில் தோன்றுவார் என்றுகூறப்படுவதே ஆகும். இந்தத் தகவல் காட்டுத் தீ போல் பரவி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும்2.0 வில் ரோபோடிக்ஸ் விஞ்ஞானியாக உள்ள வசீகரனுடன் உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் ஐஸ்வர்யா ராய் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.

click me!