
சமீபத்தில் ஸ்டார்டஸ்ட் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் முன்னணி பிரபலங்கள் சல்மான் கான், ரன்பீர் கபூர், ஷாருக் கான் போன்ற ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தற்போது நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் விருது விழாவின்போது தனது மாமியாரும், நடிகையுமான ஜெயா பச்சனின் தோளில் சாய்ந்து பரிதாபமாக கண் கலங்கி கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது....
இந்த விருது விழாவை ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் தான் தொகுத்து வழங்கினார்.
ஆனால் ஐஸ்வர்யாவுக்கான விருதை அவர் அறிவிக்கவில்லையாம். இதற்கு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு என கூறபடுகிறது அந்த ஃபீலிங்கில் தான் ஐஸ் மாமியார் தோளில் சாய்ந்து கண் கலகியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய்கான விருதை அவரது மாமனார் அமிதாப் பச்சன் வழங்கினார். உடனே அவர் அமிதாபின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்து அனைவருடைய கைதட்டலையும் பெற்றுதந்தது .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.