
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே பெள்ளட்டிமட்டம் பகுதியில் வசித்து வரும் நடிகர் சத்தியராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார்.
இவர் கடந்த 10 நாட்களுக்கு முன், கோவையில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டு . நேற்று தான் வீடு திரும்பினார்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் ஜன்னல், வெளியே பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டின் பீரோவில உள்ள லாக்கரை, கொள்ளையர்கள் உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், முடியவில்லை. இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் சிறிய பொருட்களை லவட்டி கொண்டு சென்றது தெரிந்தது.
புகாரின் பேரின் அங்கு வந்த வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
எந்தெந்தப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்தும், இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள், உள்ளூர் மக்களிடம் விசாரித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.