இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் இந்தியாவில் 3வது அதிகளவு பின்தொடர்பாளர்களை கொண்ட நடிகையாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் முன்னேறியுள்ளார். 91.6 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று பிரதமர் மோடியை (91.3m) பின்னுக்கு தள்ளியுள்ளார்.
பேஸ்புக், எக்ஸ்(டுவிட்டர்) போன்று திரை நட்சத்திரங்கள் பெரிதும் விரும்பும் சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் உள்ளது. இவ்வலைதளத்தில் இந்தியா அளவில், பிரபலங்களை பொறுத்தவரை அதிக பின்தொடர்வோர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். அவரை சுமார் 271 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார். நிக்ஜோனஸ் திருமணம் செய்ததைதொட்ர்ந்து அவரது புகழ் பாலிவுட் முழுவதிலும் பரவியது. பிரியங்கா சோப்ராவை சுமார் 91.8 மில்லியன் பார்வையாளரக்ள பின் தொடர்கின்றனர்.
அந்த இருவரையும் தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி 91.3 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு மூன்றாவது இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது அவர் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் 91.6 மில்லியன் பார்வையாளர்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் அதிக பின்தொடர்வோர் பட்டியலில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு பிறகு நடிகை ஷ்ரத்தா கபூர் இடம்பெற்றுள்ளார்.
பாலிவுட்டில் பிஸி நடிகையாக வலம் வரும் ஷ்ரத்தா கபூர், இயக்குனர் அமர் கௌசிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ் நடிப்பில் கடந்த 15ம் தேதி சுதந்திரதினத்தன்று வெளியான ‘ஸ்ட்ரீ 2’ பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியானது முதல் உலகம் முழுவதும் சுமார் ரூ.350 கோடி வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது.
மீனா முதல்.. ஜோதிகா வரை; கெஸ்ட் ரோலில் ஒற்றை பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகைகள்!
முதல் 4 இடங்களைத் தொடர்ந்து, 8.51 கோடி ஃபாலோயர்களுடன் பாலிவுட் நடிகை ஆலியா பட், 80.4 கோடி ஃபாலோயர்களுடன் நடிகை கத்ரினா கைஃப் மற்றும் 7.98 கோடி ஃபாலோயர்களுடன் நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் மகன் திருமணம் நிறுத்தப்பட்டது ஏன்? விஜய பிரபாகரன் கல்யாணம் எப்போது வெளியான தகவல்!