வயிற்றில் குழந்தையோடு.. விஜய் டிவி நாஞ்சில் விஜயன் கையில் ராக்கி கட்டிய இந்திரஜா! வைரல் வீடியோ!

By manimegalai a  |  First Published Aug 20, 2024, 11:34 AM IST

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும், நடிகையுமான இந்திரஜா சங்கர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், நாஞ்சில் விஜயன் கையில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடிய வீடியோ வெளியாகி உள்ளது.
 


இளம் வயதிலேயே நடிகராக வேண்டும் என முடிவு செய்த ரோபோ,  வாய்ப்புகளையும் தேட துவங்கினார். விஜயகாந்தின் தர்மசக்கரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா,  ஸ்ரீகாந்த் நடித்த ஜூட் போன்ற படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்த ரோபோ சங்கருக்கு, 2012 ஆம் ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.

கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்டுத்திக்கொண்ட ரோபோவுக்கு, விஜய் டிவி வழங்கிய அடுத்தடுத்த வாய்ப்புகள், அவர் சினிமாவில் வலுவாக காலுன்ற காரணமாக அமைந்தது. அந்த வகையில் ஏய், தீபாவளி, கற்க கசடற, மதுரை வீரன், ரௌத்திரம், போன்ற படங்களில் சிறு வேடத்தில் நடித்த ரோபோவுக்கு 'மாரி' படத்தில் தனுஷுடன் முழுவதுமாக பயணிக்கும் ரோல் கிடைக்க அதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

Tap to resize

Latest Videos

undefined

நாட்டாமை படத்தில் ரஜினிகாந்த் நடிச்சிருக்காரா? அடடே அதுவும் இந்த ரோலா?

இதன்பின்னர் நயன்தாரா நடித்த மாயா, ஜி வி பிரகாஷ் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா, விஜய் உடன் புலி, சுந்தர் சி யின் அரண்மனை, அஜித்துடன் விஸ்வாசம் போன்ற ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். குருவி போல் ஓடி ஓடி... சம்பாதித்த மொத்த பணத்தையும் கொட்டி தன்னுடைய மகள் இந்திரஜாவுக்கு மிக பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தார். 

ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக், தொழிலதிபர் என்பதை தாண்டி, சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்கிற முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். கூடிய விரைவில் இவர் இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்திரஜா சங்கரும் தளபதி விஜயின் 'பிகில்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கார்த்தி - அதிதி ஷங்கர் நடித்த 'விருமன்' படத்தில் நடித்திருந்தார். SAC-யுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்திரஜா - கார்த்திக்கிற்கு திருமணமான நிலையில், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தினார். கார்த்திக் மற்றும் இந்திரஜா சங்கர் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்த நிலையில், கர்ப்பமாக இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் இருந்தும் விலகுவதாக இந்திரஜா தெரிவித்தார்.

உன் டியூன் சரி இல்லை... அசிங்கப்படுத்தி வெளியேற்றப்பட்ட இளையராஜாவின் முதல் வாய்ப்பு குறித்து பகிர்ந்த வாலி!

இது ஒரு புறம் இருக்க, நேற்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில் தன்னுடைய சகோதரராக இந்திரஜா நினைக்கும் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் கையில் ராக்கி கட்டி அதனை கொண்டாடி உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

click me!