தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா சாப்பிட்டு மிச்சம் வைத்த ஆப்பிள் ஒன்று ஏலம் விடப்பட்டு ரசிகர்கள் போட்டி போட்டு வாங்கியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், அந்த ஆப்பிள் உண்மையில் எவ்வளவுக்கு ஏலம் போனது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை சில்க் ஸ்மிதா, வெள்ளித்திரைல் ஜொலித்த காலம் அது. பரபரப்பாக பம்பரம்போல் சுழன்றுகொண்டிருந்தார். குறைந்த படிப்பும், அதிக அறிவும் கொண்ட விஜயலட்சுமி வட்லபதி பின்னாளில் சில்க் ஸ்மிதாவாக அறியப்பட்டார். இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்ட விஜயலட்சுமி, மாமியார் தொல்லை தாங்க முடியாமல் சென்னைக்கு ஓடிவந்து நடிகையானார். ஒவ்வொரு பாடத்தையும் கற்றுக்கொண்டு நடிகையாகவும், நடனக்கலைஞராகவும் வளர்ந்த சில்க் ஸ்மிதா தொடக்கத்தில் மலையாளத்திலும், பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளித்திரையில் வெற்றிகரமாக வலம் வந்த சில்க் ஸ்மிதா. ஜோதிலட்சுமி, ஜெயலட்சுமி போன்ற நடனக் கலைஞர்களை பின்னுக்குதள்ளி முதலிடம் பிடித்தார். சில்க் ஸ்மிதாவிடம் தெரியாத வசீகரம் இருந்தது. அக்கால இளசுகளின் கனவுக்கன்னியாகவே இருந்தார். அவர் நகைச்சுவை, ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளார். டஜன் கணக்கான சிறப்புப் பாடல்களில் நடனமாடியுள்ளார்.
சில்க் ஸ்மிதாவின் ஒரு சிறு சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் சாப்பிட்டு மிச்சம் வைத்த ஆப்பிள் ஒன்று ஏலம் விடப்பட்டதில் அதனை வாங்க ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டாக கூறப்படுகிறது. ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது, ஷாட் இடைவெளியில் ஆப்பிள் சாப்பிட ஆரம்பித்தார் சில்க் ஸ்மிதா. ஒரு துண்டை கடித்தவுடன், ஷாட் தயாரானதும், அவர் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆப்பிளை ஒதுக்கி வைத்துவிட்டு நடிக்கச் சென்றுவிட்டார். இதை கவனித்த ஒருவர் ஆப்பிளை எடுத்து வைத்துள்ளார். இதனை ஸ்டிஸ் ரவி படம்பிடித்துள்ளார்.
சில்க் ஸ்மிதா ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சு ஜெயிச்சு இருக்காங்க: நடிகர் மோகன் நெகிழ்ச்சி
சில்க் ஸ்மிதா சாப்பிட்ட அந்த ஆப்பிள் ஏலம் விடப்பட்ட போது, ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அதன் விலை குறித்து பல்வேறு வாதந்திகள் உள்ளன. ரூ. 2 லட்சம் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை ரூ. 1 லட்சத்துக்கு வாங்கியதாக வேறு ஒருவர் கூறுகிறார். வெறும் ரூ. 200 மட்டுமே ஏலம் போனது என்கின்றனர் சிலர். மற்றவர்கள் 25000 ஆயிரம் என்கிறார்கள்.
உண்மையில் அந்த ஆப்பிள் எவ்வளவு வாங்கப்பட்டது என்ற தகவல் இல்லை. புகழின் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதா 1996 இல் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 35 தான். காதலில் வயப்பட்டு ஏமாற்றப்பட்ட சில்க் ஸ்மிதா தனிமையில் விடப்பட்டார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த சில்க் ஸ்மிதாவின் இறுதி ஊர்வலத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை. அனாதையாக விடப்பட்டார் என சினிமா வட்டார தவகல்கள் தெரிவிக்கின்றன.