
பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி வெறும் 70 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவாராம். மீதி கதை அவருடைய மனைவியான ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றியே நகரும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் என்பது பார்க்கும் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. சாதி மத அரசியலை தாண்டி இன்னைக்கு தண்ணியையும் காற்றையும் வைத்து தான் மொத்த உலக அரசியலும் நடக்க போகுது என விஜய் சேதுபதி பேசும் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. “2000 பேருக்கு வேலை கொடுத்துட்டு விவசாயம் பண்ணிட்டு இருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிப்பாட்டினா எப்படி சார்”, நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணி வண்டி தள்ளிக்கிட்டு திரியுறாங்க, அந்த கரண்ட் கம்பெனிகாரன் ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்குறான் பிளேட் கழுவ, அதை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றியா? என விஜய் சேதுபதி பேசுவது போன்ற வசனங்கள் பரபரப்பை கூட்டுகிறது.
இதையும் படிங்க: டீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்ஷி...!
இதில் இருந்து பெயர் எடுத்துடுவியா?... இதுதானே இந்த ரேஷன் கார்டு தானே எதுவும் வேண்டாம் போ... நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்க போ... என அரசு அதிகாரி ஒருவரிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் அரசியல் வசனங்களுடன் படத்தின் டீசர் படு சூப்பராக நிறைவடைகிறது. நயன்தாராவின் அறம் படத்தை போல, க/பெ ரணசிங்கமும் முக்கிய இடத்தை பிடிக்கும் என இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரான் புகழ்ந்து குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!
இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பல படங்களின் தயாரிப்பாளர்கள் ஆன்லைன் தளமான நெட் பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்டவற்றில் படங்களை வெளியிட தயாராகி வருகின்றனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!
இதற்கு முன்னதாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது சூர்யாவிற்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தை ஆன்லைன் தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. காரணம் இதற்கு முன்னதாக மண்டி ஆப் விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதியை வியாபாரிகள் வறுத்தெடுத்தனர். தற்போது ஆன்லைன் தளத்தில் விஜய் சேதிபதி படத்தை வெளியிட்டால் தியேட்டர் உரிமையாளர்கள் நிச்சயம் பிரச்சனை செய்வார்கள். அதனால் என்ன மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் வருமோ? என்ற எண்ணம் மக்கள் செல்வனின் ரசிகர்கள் மனதில் அச்சத்தை விதைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.