குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகல... மீண்டும் ஷூட்டிங்கிற்கு திரும்பிய மைனா நந்தினி... வைரல் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 24, 2020, 11:29 AM IST
குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகல... மீண்டும் ஷூட்டிங்கிற்கு திரும்பிய   மைனா நந்தினி... வைரல் வீடியோ...!

சுருக்கம்

 அத்துடன் நிறைமாத வயிற்றுடன் மைனா நந்தினி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. 

'வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி.  இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில்  மைனா என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமாக்கியது.  

 

இதையும் படிங்க:  “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ரா தனது வருங்கால கணவருடன் வெளியிட்ட அசத்தல் போட்டோ... குவியும் லைக்ஸ்...!

அதனைத் தொடர்ந்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார். சீரியலில் பிசியாக நடித்து வந்த நந்தினி முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பெற்றோருடன் மைனா நந்தினி வசித்து வந்த நேரத்தில், அவரது முதல் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சில காலங்கள் சீரியலில் இருந்து விலகி இருந்த மைனா நந்தினி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். 

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது நடிகை... இனி முல்லை - கதிர் ஜோடிக்கு சிக்கல் தான்...!

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கர்ப்பமாக இருந்த மைனா நந்தினிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அத்துடன் நிறைமாத வயிற்றுடன் மைனா நந்தினி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. 

 

இதையும் படிங்க:  அஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது?... டாப் ஆங்கிளில் வெளியிட்ட கிளாமர் செல்ஃபி...!

சமீபத்தில் கூட யோகேஷ்வரன் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்தார். குழந்தை பிறந்ததற்கு பின்னர் நடிகை மைனா தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது. இப்படி ஒரு  மீண்டும் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷூட்டிங்கில் நந்தினி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!