உறுதியானது ரஜினி - கமல் இணைவு?... நவம்பரில் காத்திருக்கிறது அதிரடி அறிவிப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 07, 2020, 05:50 PM ISTUpdated : Jul 07, 2020, 05:51 PM IST
உறுதியானது ரஜினி - கமல் இணைவு?... நவம்பரில் காத்திருக்கிறது அதிரடி அறிவிப்பு...!

சுருக்கம்

விரைவில் படத்திற்கான பூஜை எல்லாம் போட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல்களை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மறுத்தது.

சினிமா உலகில் அடியெடுத்த வைத்த காலத்தில் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு, அதாவது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஒளிர ஆரம்பித்த பிறகு இருவரையும் ஒரே படத்தில் இணைப்பது என்பது சாத்தியமில்லாத காரியமாக மாறிப்போனது. தனது 65வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி முடித்த கமல் ஹாசனுக்கு மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் அதற்கான முயற்சிகளில் இறங்கினார். 

அப்போது இருவரும் சினிமாவை தாண்டி அரசியலில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தனர். அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு மாஸ் படத்தை தயாரிக்க வேண்டுமென முடிவு கமல் முடிவு செய்தார். விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும்,  அதை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

 

இதையும் படிங்க: யூ-டியூப் லைவில் கணவருக்கு லிப் லாக்... வனிதாவை பார்த்து தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்....!

முதலில் கமல் ஹாசனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கதையில் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என உலக நாயகன் தான் முடிவு செய்தார். நான் நடிக்காவிட்டாலும் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டால் அந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை பிடித்து போக, ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

விரைவில் படத்திற்கான பூஜை எல்லாம் போட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல்களை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மறுத்தது. அந்த படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100 கோடி சம்பளம் கேட்பதாகவும், அதனால் கமல் ஹாசன் பட வேலைகளை நிறுத்திவிட்டதாகவும் கூட  வதந்திகள் பரவின. கொரோனாவால் ரஜினியின் அண்ணாத்த, கமல் ஹாசனின் இந்தியன் 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து ரஜினி, கமல் ஒன்றிணைவது குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள அந்த படத்தை கமல் ஹாசன் தயாரிக்க உள்ளாராம். அதில் கமல் நடிப்பாரா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ள அந்த படத்திற்கான ஷூட்டிங் நவம்பரில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!