பட ரிலீஸுக்கு முன்னாடியே இப்படியா?... முதல் படத்திலேயே சீயான் மகனுக்கு பெருகும் ஆதரவு... யு-டியூப்பில் கெத்து காட்டும் "ஆதித்யா வர்மா"...!

Published : Nov 11, 2019, 06:51 PM IST
பட ரிலீஸுக்கு முன்னாடியே இப்படியா?... முதல் படத்திலேயே சீயான் மகனுக்கு பெருகும் ஆதரவு... யு-டியூப்பில் கெத்து காட்டும் "ஆதித்யா வர்மா"...!

சுருக்கம்

அப்பாவுக்கே டப் கொடுக்கும் வகையில் துருவ் வெளிப்படுத்திய அசத்தலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து.   அதனை நிரூபிக்கும் விதமாக படத்தின் டிரெய்லர் யூ-டியூப்பில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் படக்குழு மட்டுமல்ல மகனின் வளர்ச்சியைக் கண்டு சீயான் விக்ரமும் செம்ம ஹாப்பியாகியுள்ளார்.

தெலுங்கின் அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மார்டன் தேவதாஸ் கதையை தெலுங்கு திரையுலகமே ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தது. இந்த படத்தில் காதலியின் பிரிவால் ஏற்படும் பொல்லாத கோபத்தை எரிமலையாக வெளிப்படுத்திய விஜய் தேவரகொண்டா இளம் பெண்களின் கனவு நாயகனாக மாறிப்போனார். தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்ய செய்யப்படுகிறது.

முதற்கட்டமாக இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட ‘கபீர் சிங்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்துள்ளது. ஷாஹித் கபூர், கீரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தமிழில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. முதலில் இயக்குநர் பாலா இயக்குவதாக இருந்த நிலையில், தயாரிப்பாளருடனான சில பிரச்னைகள் காரணமாக படத்தில் இருந்து பாலா விலகினார். தற்போது  கிரீசயா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி கேரக்டரில் சியான் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அக்டோபர் 21ம் தேதி வெளியிடப்பட்டது. 

அதில் அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா வெளிப்படுத்திய ஆக்ரோஷம், காதல் இரண்டையுமே துருவ் அழகாக வெளிப்படுத்தியிருந்தார். மருத்துவக் கல்லூரி மாணவனாக வரும் துருவ், தனது ஜூனியர் மாணவியான மீராவை ராக் செய்யும் போதும், புட்பால் மேட்சில் தவறாக நடந்தவனை புரட்டி எடுக்கும் போதும், சாதிய பிடிவாதத்தால் பிரிந்த காதலை நினைத்து உருகும் போதும் சீயான் விக்ரமை கண்முன்பு காட்டியிருந்தார். அப்பாவுக்கே டப் கொடுக்கும் வகையில் துருவ் வெளிப்படுத்திய அசத்தலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து.  அதனை நிரூபிக்கும் விதமாக படத்தின் டிரெய்லர் யூ-டியூப்பில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் படக்குழு மட்டுமல்ல மகனின் வளர்ச்சியைக் கண்டு சீயான் விக்ரமும் செம்ம ஹாப்பியாகியுள்ளார். தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக நவம்பர் 21ம் தேதி ஆதித்யா வர்மா திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?